பாஜக - திமுக கூட்டணி எப்போதுமே இருக்காது… சொல்ல முடியுமா?.. மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்
நெல்லை: அரசியலில் எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுகவினால் சொல்ல முடியுமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் செய்தியாளரிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எம்ஜிஆர் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் காலங்களில் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களித்ததாகவும், தற்போது வேட்பாளர்களை பார்த்து மக்கள் வாக்களிப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்வதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும் டிடிவி தினகரன் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது நம்பியார் காலத்து பாணி எனவும் டிடிவி தினகரன் கிண்டலாக விமர்சித்தார்.
மேலும், மதச்சார்புள்ள கட்சி என்பதாலேயே பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்று விளக்கம் அளித்த டிடிவி தினகரன், பாஜகவுடன் எங்களுக்கு சொந்த விருப்பு, வெறுப்பு ஏதுமில்லை என்றார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற 95% தொண்டர்கள் அமமுகவில் தான் இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் பா.ஜ.க-வுடன் கூட்டணி பேசினார் என்று கூறிய டி.டி.வி.தினகரன், இந்து மதத்தைப் பற்றி கண்டபடி பேசிவிட்டு, இப்போது திடீரென நான் இந்து மதத்துக்கு எதிரி இல்லை என ஸ்டாலின் பேசுவதாக கூறினார். அரசியலுக்கு மத சாதி துவேஷங்கள் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications