குடும்பத் தகராறு.. மாமியாரை கொன்ற மருமகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
நெல்லை: நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டி கொன்ற மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மூலைக்கரைபட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (46). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளராக வேலை செய்து வந்தார்.

கூலி வேலை
இவருடைய கணவர் வேலாயுதம் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தியில் கணவர் அபிமன்யுடன் வசித்து வருகிறார்.

அபிமன்யு
இந்நிலையில் ராஜலட்சுமிக்கும் அபிமன்யுவிற்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அபிமன்யு மாமியார் ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.

அபிமன்யுவுக்கு ஆத்திரம்
அப்போது ஆத்திரமடைந்த அபிமன்யு மாமியார் என்றும் பாராமல் ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை அருகில் நின்ற அன்பழகன் என்பவர் தடுத்துள்ளார்.

அரிவாளால் வெட்டிய அபிமன்யு
அவரையும் அபிமன்யு வெட்டியுள்ளார். காயமடைந்த அன்பழகனை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் செய்து விசாரணை நடத்தி மாமியாரைக் கொன்ற மருமகனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications