நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தாடி பாலாஜி இணைகிறாரா? அப்போ ஏன் அவர் திருவள்ளூர் போனாரு?
திருவள்ளூர்: நடிகர் விஜய் எந்த நல்ல விஷயம் செய்தாலும் அங்கு நானும் கண்டிப்பாக இருப்பேன் என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்கு தாடி பாலாஜி வந்திருந்தார். அவர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தர்ப்பூசணி துண்டுகள், நீர் மோர், இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதுகுறித்து நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். இத்தனை சூரிய வெப்பத்தையும் தாண்டி நான் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா? வெயிலில் மக்கள் வாடி கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்து நீர் மோர், பழச்சாறு உள்ளிட்டவைகளை கொடுத்து வருகிறார்கள்.
எங்கு திரும்பினாலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட மேற்கு இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. திடீரென இந்த நிகழ்வுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நடிகர் விஜய் எந்த விஷயம் செய்தாலும் நான் அங்கு இருப்பேன். விஜய்யும் விஜய்யின் தந்தை எஸ்ஏசியும் எனக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்கள். அதற்கு நன்றிக் கடனாக தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி எப்போது அழைத்தாலும் சரி நான் வந்து கலந்து கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தினருடன் பயணிப்போம். எதிர்காலத்தில் கட்சியில் சேருவேனா என்பதை அப்போது பார்த்துக் கொள்வோம். 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் நன்றாகத்தான் இருக்கிறது. யாரோ தவறு செய்வதால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுகிறது. மக்களும் அரசின் நலத்திட்டங்களை வாங்கிக் கொண்டு அவர்களை திட்டுவது தவறு.
திமுக ஆட்சிக்கு மார்க் போட நான் என்ன வாத்தியாரா, நான் ஒரு நடிகர். எந்த கட்சி நல்லது செய்தாலும் அக்கட்சியுடன் பயணிக்க தயாராக உள்ளேன். லோக்சபா தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற குழப்பத்தில் எல்லோரும் இருப்பதை போல் நானும் இருக்கிறேன் என தெரிவித்தார்.
நடிகர் தாடி பாலாஜியை சுற்றி அவருடைய குடும்ப வாழ்க்கை தொடர்பாக அவ்வபோது சர்ச்சைகள் எழுந்தாலும் அவர் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லட்சயா ஸ்ரீயை அவருடைய அரக்கோணம் வீட்டில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
அது போல் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற நாங்குநேரி சின்னத்துரையையும் சந்தித்து தாடி பாலாஜி வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் திமுகவில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தவெக நிகழ்ச்சிக்கு போனதை போல் திமுகவின் மக்கள் நலம் சார்ந்த விஷயங்களிலும் கலந்து கொண்டதாகவே சொல்லப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications