5 நிமிடம் தான்! கெஞ்சினாலும் கேட்காத பெண்கள்! அதிமுக மாஜி தங்கமணிக்கு திருவள்ளுரில் ஷாக்- என்னாச்சி?
திருவள்ளுர்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாஜி அமைச்சர் தங்கமணி பேசியபோது பெண்கள் புறப்பட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் மக்களுக்கு அடிக்கடி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட வாரியாக வழங்கப்படும்.
இந்நிலையில் தான் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது.

இதில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி உள்பட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் தங்கமணி பேசினார். அப்போது முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அவர் பேசி வந்தார். அதேவேளையில் தற்போது ஆட்சி செய்யும் திமுக அவர் விமர்சனம் செய்தார்.
இதுமட்டுமின்றி முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் நிர்வாக திறமையை பெருமையாக பேசி தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினை விமர்சனம் செய்தார். இந்த வேளையில் தங்கமணி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை‛புரட்சி தமிழர்' என புகழ்ந்ததோடு தொடர்ந்து பேசினார்.

இதற்கிடையே பொறுமையிழந்த பெண்கள் நிகழ்ச்சியை விட்டு புறப்பட்டனர். இதனால் இருக்கைகள் காலியாகின. இதை கவனித்த தங்கமணி சுதாரித்து கொண்டார். இதையடுத்து தங்கமணி, ‛‛இன்னும் 5 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துவிடுவேன். தாய்கமார்களே உங்களுக்கான நலத்திட்ட உதவிகளை பெற்று கொண்டு செல்ல வேண்டும்'' எனக்கூறி தொடர்ந்து பேசினார்.
அப்போது இன்னும் சில பெண்கள் வெளியேறினார்கள். இதனால் காலி இருக்கைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்தது. இதையடுத்து தங்கமணி தனது பேச்சை சீக்கிரமாக முடித்துவிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், பெண்களுக்கு தையல் மெஷின், ஏழைகளுக்கு அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications