கையில் பெரிய சைஸ் கத்தி.. அதிமுக கவுன்சிலரை குறிவைத்து.. வளைத்துப் பிடித்த மக்கள்.. செம அடி!
Recommended Video
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆற்றில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதிமுக ஒன்றிய கவுன்சிலரை கொலை செய்ய வந்ததாக அந்த நான்கு பேரும் தெரிவித்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த குப்பம் கண்டிகை ஆற்றுப்படுகையில் இன்று காலை 4 மர்ம நபர்கள் கஞ்சா போதையில் இருந்தவாறு கையில் கத்தியை வைத்துக்கொண்டு சந்தேகப்படும் படியாக இருந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரிடம் கேட்டபோது மேற்கண்ட நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக போதையில் உளறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மேற்கண்ட நான்கு பேரையும் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து இதுகுறித்து திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுபோதையில் கத்தியுடன் இருந்த நான்கு நபர்களை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிடிபட்ட 4 பேரும் திருவாலங்காடு ஒன்றியம் 12-ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான ஜீவா விஜயராகவன் கொலை செய்ய வந்ததாக தெரிவித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் திருவாலங்காடு அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் மேற்கண்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொலை செய்ய வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட நான்கு நபர்களிடமிருந்து கத்திகளை பறிமுதல் செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஒன்றிய கவுன்சிலரை ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் குப்பம் கண்டிகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications