நான் யாரையும் காதலிக்கவில்லை.. ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.. ஆசிரியர் பகவான் விளக்கம்!
Recommended Video
திருவள்ளூர்: தான் யாரையும் காதலிக்கவில்லை என ஆசிரியர் பகவான் தன் மீதான புகார் குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆசிரியர் பகவானை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக்கூறி திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் ஆசிரியர் பகவானுக்கு ஆதரவு பெருகியது.
இதனால் அவரது பணியிட மாற்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பள்ளிக்கல்வித்துறை. இந்நிலையில் திருமண மோசடி புகாரில் சிக்கியுள்ளார் ஆசிரியர் பகவான்.

ஏமாற்றியதாக புகார்
வெள்ளியகரத்தை சேர்ந்த நாதமுனி என்பவரின் மகள் கவிதாவை ஆசிரியர் பகவான் காதலித்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாக ஆசிரியர் பகவான் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆசிரியர் விளக்கம்
இதனால் நேற்று காலை முதல் ஆசிரியர் பகவானிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தன்மீதான புகார் குறித்து விளக்கமளித்துள்ளார் ஆசிரியர் பகவான்.

எனக்கு விருப்பமில்லை
அவர் கூறியிருப்பதாவது, என் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் முற்றிலும் ஆதாரமற்றது. உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டனர். எனக்கு விருப்பமில்லை எனக் கூறி மறுத்துவிட்டேன்.

பெயருக்கு களங்கம்
தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான ஆதாரமற்ற புகாரை அளித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்கும் தயார்
புகாரின் மீதான விசாரணைக்கு தயாராக உள்ளேன். மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஆசிரியர் பகவான் தெரிவித்துள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications