"திருப்பியடிக்க காங்கிரஸ் கட்சிக்கு பவர் இருக்கிறதா" - சசிகாந்த் செந்தில் பரபரப்பு பதில்
திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகின்றனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தங்களை அவமானப்படுத்தினால் பதிலடிகொடுப்போம் என கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு திருப்பி அடிக்க பவர் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகாந்த் செந்தில் பரபரப்பு பதில் அளித்துள்ளார் [Congress MP Sasikanth spoke about his party's power].
திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பொன்னேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தலை நேரடியாக ய சந்திக்க யாருமே தயங்கவில்லை. நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். இந்தியா முழுவதும் மிகப்பெரிய சித்தாந்த சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டமே மாற்றப்படும் நிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பவர் இருக்கிறதா
இந்த நிலையில் நாங்கள் எங்கள் சொந்த நிலையை பார்ப்பதை விட, எந்த அரசாங்கம் வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்படும் என்பது முக்கியம். அதற்கான கூட்டணி முயற்சிகள் தான் எப்போதுமே இருக்கும். கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை எங்கள் கட்சியில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தான் பார்ப்பார்கள்.
எங்களை போன்ற நிர்வாகிகள் அதைப் பற்றி பொது வெளியில் பேசக் கூடாது" என்றார். அப்போது விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணியில் எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவமானப்படுத்தினால் திருப்பி அடிப்போம் என்று சொல்லியுள்ளார். திருப்பி அடிப்பதற்கு காங்கிரஸில் பவர் உள்ளதா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
மக்கள் தான் முடிவு செய்வார்கள்
அதற்கு சசிகாந்த் செந்தில், "ஏங்க.. நீங்கள் இந்த மாதிரி கேள்வி கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது. காங்கிரஸ் கட்சியில் பவர் இருக்கிறதா.. இல்லையா என்பது மக்களுடைய முடிவு. பவர் எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானது இல்லை. அந்த அரசியல் கட்சி என்ன செய்தது, மக்கள் மீது பாசம், நம்பிக்கையை பெற்றுள்ளதா என்பதுதான் பவரை முடிவு செய்யும்.
அப்படிப் பார்த்தால் இந்தியாவில் உள்ள எல்லா ஊர்களிலும் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அப்படி எல்லா ஊர்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியை பார்த்து நீங்கள் எப்படி பவர் இருக்கிறதா என்று கேட்கலாம்" என்று பதில் அளித்துள்ளார். அவரின் இந்த பதிலை காங்கிரஸ் கட்சியினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
