திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாராய பிரியர்கள் புலம்பல்! டக்குனு ஆக்‌ஷனில் இறங்கி ரெய்டு விட்ட திமுக எம்.எல்.ஏ.! ஷாக் ஆன ஊழியர்கள்!

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வாங்குவதாக மதுப்பிரியர்களிடம் எழுந்த புகாரைத் தொடர்ந்து ரெய்டு நடத்தி ஊழியர்களை எச்சரித்துள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்.

குடிகாரர்கள் தானே என்று நினைக்காமல் தங்களையும் மதித்து தாங்கள் முறையிட்ட புகார் மீது ஆக்‌ஷனில் இறங்கிய திமுக எம்.எல்.ஏ.வுக்கு கட் அவுட் வைக்காத குறையாக மதுப்பிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வின் மூலம் டாஸ்மாக் கடை ஒன்றுக்கு ரூ.10,000 வரை தினமும் கூடுதல் வருமானம் வந்திருப்பது கண்டறியப்பட்டது.

டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசு..! டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசு..!

திருவள்ளூர் எம்.எல்.ஏ.

திருவள்ளூர் எம்.எல்.ஏ.

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனை தட்டிக்கேட்டால் தட்டிக்கேட்பவருக்கு கடையில் மது இருப்பு இல்லை என பதில் கூறி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பூனைக்கு யார் தான் மணி கட்டுவார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த விவகாரத்திற்கு எப்போது தான் விமோச்சனம் பிறக்கும் என மதுப்பிரியர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

டாஸ்மாக் கடைகள்

டாஸ்மாக் கடைகள்

இந்நிலையில் இந்த விவரத்தை திருவள்ளூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கவனத்துக்கு மதுப்பிரியர்கள் சிலர் கொண்டு சென்றனர்.
இதையடுத்து உடனடியாக ஆக்‌ஷனில் இறங்கிய எம்.எல்.ஏ. விஜி ராஜேந்திரன், டாஸ்மாக் கடைகளுக்கே நேரடியாக சென்று ஆய்வு நடத்தி கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கும் பழக்கத்தை இத்துடன் கைவிட வேண்டும் என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

துறை ரீதியாக

துறை ரீதியாக

இனியும் இது போன்ற செயல் தொடர்ந்தால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவுறித்திச் சென்றிருக்கிறார். குடிகாரர்கள் தானே இவர்கள் கூறுவதெல்லாம் ஒரு புகாரா என்று நினைக்காமல் தங்களையும் மதித்து தாங்கள் முறையிட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்த திமுக எம்.எல்.ஏ.வுக்கு மதுப்பிரியர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

ரூ.10,000 வரை

ரூ.10,000 வரை

இதனிடையே திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வின் மூலம் டாஸ்மாக் கடை ஒன்றுக்கு ரூ.10,000 வரை தினமும் கூடுதல் வருமானம் வந்திருப்பது கண்டறியப்பட்டது. டாஸ்மாக் கடைக்கு எம்.எல்.ஏ. வருவார் என சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள், இந்த ஆய்வின் மூலம் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
Dmk Mla V.G.Rajendran Inspection in TASMAC Shops
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X