திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங் வேண்டாம்... பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்டி அறிவுரை கூறிய தலைமை ஆசிரியர்

மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த அரசு பள்ளியில் ஆசிரியர்கள் முடி திருத்தும் பணியை மேற்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: தலைமுடியை ஒழுங்காக வெட்டினால் ஒழுக்கம் தானாக வரும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக உள்ளது. இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் பல மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல், எண்ணெய் வைக்காமல், தலைவாராமல் செல்கின்றனர். மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பல தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மெனக்கெடுகின்றனர். திருவள்ளூரில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு முடி வெட்டி விட்டு பெற்றோர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

Recommended Video

    புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங் வேண்டாம்... பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்டி அறிவுரை கூறிய தலைமை ஆசிரியர்

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமீபகாலமாக அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸில் இணையாத பிரசாந்த் கிஷோர்... 4 முக்கிய காரணங்கள்... பரபரப்பு தகவல்கள் காங்கிரஸில் இணையாத பிரசாந்த் கிஷோர்... 4 முக்கிய காரணங்கள்... பரபரப்பு தகவல்கள்

    மாணவர்கள் முடிவெட்டும் போது, தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் வெட்டிக்கொண்டு பள்ளிகளுக்கு வருகின்றனர். இது போன்ற அலங்காரங்களை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்ப, மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யுங்கள் என தெரிவித்திருந்தார். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியிருந்தார்.

    மிலிட்ரி கட்டிங்

    மிலிட்ரி கட்டிங்

    திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக முடிவெட்டி இருந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் அருணன் முன்னிலையில் மாணவர்களுக்கு மிலிட்ரி கட்டிங் செய்து மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஊராட்சி மன்றத்தலைவர்

    ஊராட்சி மன்றத்தலைவர்

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாம்பாக்கம் அரசு பள்ளிக்கு சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி பெற்றோர்கள் அனுமதியுடன் மாணவர்களுக்கு முடி வெட்டி விட்டார். பள்ளியில் படிக்கும் போது ஒழுக்கத்துடன் வளர்த்தால்தான் நல்ல நிலைக்கு வரமுடியும். இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று எடுத்துக் கூறினார்.

    மாணவர்களுக்கு சிகை அலங்காரம்

    மாணவர்களுக்கு சிகை அலங்காரம்

    பள்ளி வளாகத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களை வரவழைத்து 300 மாணவர்களின் தலை முடிகளை வெட்டி ஒழுங்குபடுத்தினர். இதில் ஒரு சில மாணவர்கள் முடிவெட்ட விடாமல் அடம் பிடித்தபோது, காவல்துறையினர் உதவியுடன் அவர்களை இறுக்கி பிடித்து தலை முடிகளை வெட்டினர்.

     ஸ்டைல் வெட்டு மாணவர்கள்

    ஸ்டைல் வெட்டு மாணவர்கள்

    தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தலைமுடி, நீளமாக வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர். சில பள்ளிகளில் மட்டுமே தலைமை ஆசிரியர் சொல்வதை மாணவர்கள் கேட்கின்றனர். இதே போல மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    English summary
    A headmaster of a school in Tiruvallur has cut the hair of students and received praise from parents.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X