திருவள்ளூர் தீ விபத்து! 5 மணி நேரத்திற்கு மேலாக எரியும் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் சேவையும் முடக்கம்
திருவள்ளூர்: சென்னை அடுத்துள்ள திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மணலி பகுதியில் இருந்து எரிபொருள் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு ரயிலில் திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாகத் திருவள்ளூர் மார்க்கமாகச் செல்லும் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலை 5.30 மணி முதலே அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
நமது நாட்டில் கடந்த சில காலமாகவே விமான விபத்துகள் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் அவ்வப்போது நடக்கும் இந்த விபத்துகளால் பெரிய சிக்கலே நிலவுகிறது. இதற்கிடையே இப்போது மீண்டும் ஒரு மோசமான ரயில் விபத்து நடந்துள்ளது. திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மணலியில் இருந்து திருப்பதி பகுதிக்கு செல்லும் இந்த சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.

ரயில் விபத்து
மொத்தம் 52 டேங்கரில் டீசல் ஏற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே சவந்த போது உராய்வு அதிகரித்து வெப்பம் அதிகரித்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் உறுதியான தகவல்கள்இல்லை. இந்த தீ விபத்து காரணமாக அங்குப் பல மீட்டர் உயரத்திற்குத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
டேங்கர்கள்
தீ விபத்தைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். டீசல் என்பதால் தண்ணீர் பயன்படுத்தி இந்த தீயை அணைக்க முடியாது. இதனால் சிறப்பு நுரை மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 52 டேங்கர்களில் 4 டேங்கர்களில் மட்டுமே தீப்பிடித்த நிலையில், மற்ற டேங்கர்கள் பாதுகாப்பாக தனியாக இழுத்துச் செல்லப்பட்டன. அவை சுமார் 500 மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை குளிர்விக்க அதன் மேல் நீர் அடிக்கப்பட்டு வருகிறது.
ரயில் சேவை பாதிப்பு
இந்த தீ விபத்து காரணமாகத் திருவள்ளூர் மார்க்கமாகச் செல்லும் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவள்ளூர் வரை புறநகர் ரயில் சேவை வழக்கம் போல இயங்குகிறது. ஆனால், திருவள்ளூர் அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் ரயில் சேவை முடக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் என மொத்தம் 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளனர.
ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் அந்த பேருந்துகளை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தை தொடர்ந்து உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 044 2535 4151, 044 2435 4995 ஆகிய எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
5 மணி நேரம்
அதேபோல தீ காரணமாக கரும்புகை ஏற்பட்டுள்ளது. இது சற்றிலும் பரவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் வயதானவர்கள், சுவாச பிரச்சினை கொண்டவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், தீ 5 மணி நேரமாக தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், அந்த பகுதிக்கு மக்கல் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயை விரைந்து அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?












Click it and Unblock the Notifications