முதல்ல கணவன், அப்பறம் காதலன்.. அடுத்து கள்ளக்காதலன்.. இறுதியில்.. நடுங்க வைத்த திருவள்ளூர் பிரியங்கா
மனைவியை கொன்ற கணவன் கைதானார்
திருவள்ளூர்: இளம்பெண்ணின் தவறான நடத்தை, அடுத்தடுத்த பெரிய சோகத்தை தந்துவிட்டது.. இதனால் 3 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வெங்கல் அடுத்த மென்னவேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்... இவருடைய மனைவி பெயர் பிரியங்கா.. ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த தம்பதிக்குள் ராஜ்குமார் என்பவர் மூலம் புயல் வீச தொடங்கியது.
பிரியங்காவுக்கு ராஜ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்... இவர் ஒரு ஜேசிபி டிரைவர்.. ராஜ்குமாருடன் நெருக்கம் அதிகமாக அதிகமாக, கார்த்திக்கை பிரியங்காவுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது.

நெருக்கம்
ஒருகட்டத்தில், ராஜ்குமாருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ முடிவெடுத்தார்.. அதற்காக தேவையில்லாமல் கார்த்திக்குடன் சண்டை போட துவங்கினார். இதை சாக்காக வைத்து கொண்டு, கடந்த மாதம் அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்.. பிறகு அங்கிருந்து ராஜ்குமாருடன் ஓடிவிட்டார்.. திருவாலங்காட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடித்தனம் நடத்த ஆரம்பித்தனர். ஆனால், வேலை விஷயமாக ராஜ்குமார் வெளியூருக்கு செல்ல நேரிட்டது.. ஜேசிபியை எடுத்து கொண்டு வெளியூருக்கு சென்றால், திரும்பி வருவதற்கு 2, 3 நாட்கள் ஆகுமாம்.

கள்ள உறவு
அந்த சமயத்தில், வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவுக்கு வேற ஒருத்தருடன் உறவு ஏற்பட்டது. இது ராஜ்குமாருக்கு தெரிந்ததுமே கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்.. இந்த கள்ள உறவு தொடர்பாக இருவருக்கும் தகராறும் வந்தது.. உடனே பிரியங்கா, இதையே சாக்காக வைத்து கொண்டு மறுபடியும் அம்மா வீட்டுக்கு போய்விட்டார். ஆனாலும், ராஜ்குமாருக்கு மனசில்லாமல், பின்னாடியே சென்று பிரியங்காவை சமாதானம் செய்து தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்..

விஷம்
ஆனால், வீட்டிற்குள் பிரியங்கா சென்றதுமே அடுத்த செகண்ட், அவரது கைகளை ஒரு பெரிய கயிறு எடுத்து கட்டிப்போட்டார் ராஜ்குமார்.. ஏற்கனவே ரெடியாக கலக்கி வைத்திருந்த விஷம் கலந்த கூல்டிரிங்ஸ்ஸை எடுத்து பிரியங்காவின் வாயில் ஊற்றினார்.. வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றவும், உயிரிழந்தார் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதையடுத்து, ராஜ்குமார், தன் மனைவி தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக போலீசுக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னார்...

பிரியங்கா
போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கியபோதுதான் பிரியங்காவின் அம்மா, தன் சந்தேகத்தை போலீசாரிடம் தெரியப்படுத்தினார்.. கணவருடன் சமாதானமாக சென்ற தன்னுடைய மகள், எப்படி இறந்திருக்க முடியும், சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தந்தார்.. இதையடுத்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை ராஜ்குமார் பக்கம் திரும்பவும், இறுதியில் உண்மை வெளியே வந்தது.. இப்போது அவர் கைதாகி உள்ளார்.. விசாரணை நடந்து வருகிறது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications