அமைச்சர் நாசர் மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட்! ஆவடி துணை மேயர் பதவிக்கு குறி!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா போட்டியிடுகிறார்.

அமைச்சரின் மகன் தேர்தலில் போட்டியிடுவதால் ஆவடி மாநகராட்சி 4-வது வார்டு தேர்தல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆவடி மாநகராட்சியில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜாவுக்கு துணை மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி

நகர்ப்புற உள்ளாட்சி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், தேர்தல் களம் விறு விறுப்படைந்துள்ளது. இந்நிலையில் ஆவடி மாநகராட்சி 4-வார்டு கவுன்சிலர் பதவிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா போட்டியிடுகிறார். ஆவடி மாநகராட்சியாக மாற்றப்பட்டுவதற்கு முன்பாக நகர்மன்ற தலைவராக இருந்தவர் அமைச்சர் நாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன் சிக்னல்

கிரீன் சிக்னல்

அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அவர் தான் தேர்வு செய்தார். இதனிடையே தமது மகனை வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்துவது தொடர்பாக முறைப்படி தலைமைக்கு தகவல் தெரிவித்து அனுமதி கோரியிருக்கிறார். நாசர் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் நன்மதிப்பு காரணமாக இதற்கு தலைமையில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது.

ஆவடி துணை மேயர்

ஆவடி துணை மேயர்

இதையடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கவுன்சிலர் பதவிக்கு களமிறங்கியுள்ள அமைச்சரின் மகன் ஆசிம் ராஜா, வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு வருகிறார். அமைச்சரின் மகனுக்காக தேர்தல் பணியாற்றி உடன்பிறப்புகள் போட்டிபோட்டு 4-வது வார்டில் பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஆவடி மாநகராட்சி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுக அங்கு அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் ஆசிம் ராஜா துணை மேயராக வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்களின் உறவுகள்

அமைச்சர்களின் உறவுகள்

அமைச்சர் நாசர் மகனை போலவே மற்றொரு அமைச்சரான செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியாரும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது கவனிக்கத்தக்கது. இதேபோல் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமியும் தூத்துக்குடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+