மோடி நாட்டின் காவலாளி அல்ல.. அவர் எடப்பாடியின் காவலாளி.. திருவள்ளூரில் ஸ்டாலின் கிண்டல்
பிரதமர் மோடி மக்களின் காவலர் கிடையாது, அவர் முதல்வர் பழனிசாமியின் காவலர்தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
திருவள்ளூர்: பிரதமர் மோடி மக்களின் காவலர் கிடையாது, அவர் முதல்வர் பழனிசாமியின் காவலர்தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் திருவள்ளூரில் பிரச்சாரம் செய்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெய்குமாருக்காகவும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பூந்தமல்லி தொகுதிக்கான திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.

ஸ்டாலின் பேச்சு
பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், திருவாரூரில் தொடங்கி இன்று திருவள்ளூர் வந்திருக்கிறேன். நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது. மக்கள் அதே உற்சாக வரவேற்பு தருகிறார்கள். கொஞ்சம் கூட ஆதரவு குறையவில்லை. மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதை தான் இது எடுத்துக் காட்டுகிறது.

மோடி யார்
பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டின் காவலாளி கிடையாது. அவர் கொள்ளையடித்துவிட்டார். வேண்டும் என்றால் அவரை எடப்பாடியின் காவலாளிதான் என்று கூறலாம். அதுதான் சரியாக இருக்கும். வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு வெளியூருக்கு தப்பிச் சென்றவர்களுக்குத்தான் மோடி காவலாளியாக இருக்கிறார்.

கோரிக்கை
கருணாநிதி வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியவர்தான் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங். அவரால் தமிழகத்திற்கு நிறைய நலத்திட்டங்கள் வந்தது. கருணாநிதி கோரிக்ககைளை நிறைவேற்ற மன்மோகன் சிங்குக்கு பக்க பலமாக இருந்தவர்தான் அன்னை சோனியாகாந்தி என்பதை நான் நினைத்து பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு
நீட் தேர்வை ரத்து செய்யுமாறு 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் எடப்பாடியால் பிரதமரிடம் வலியுறுத்த முடியவில்லை. அவர் நம் தமிழ்நாட்டிற்காக என்ன செய்தார். எடப்பாடி சொல்லும் அளவிற்கு ஒரு நலத்திட்டமாவது கொண்டு வந்து இருக்கிறாரா சொல்லுங்கள், என்று ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications