பல் டாக்டர் செய்த காரியம்.. 3வது மனைவியாக மகள் காதல் திருமணம்.. விரக்தியில் பெற்றோர் தற்கொலை
மகள் 3வது திருமணம் செய்ததால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்
திருவள்ளூர்: ஆசை ஆசையாய் வளர்த்த மகள், 3வது மனைவியாக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் இருவரும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்துள்ளது மப்பேடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் தாமரைசெல்வன்.. 60 வயதாகிறது.. மனைவி பெயர் சரளா.. 55 வயதாகிறது.
இவர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார்.. இவரை பாடுபட்டு பல் டாக்டருக்கு பெற்றோர் படிக்க வைத்தனர். ஒரே மகள் என்பதால், அவருக்கு விருப்பமானதை எல்லாம் செய்து தந்து, டாக்டராக்கி உள்ளனர்.

திருமணம்
ஆனால், அர்ச்சனா கணபதி என்பவரை காதலித்துள்ளார். அவர் அக்கரப்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. இந்த காதலுக்கு அர்ச்சனா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. ஆனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.. காரணம், கணபதி ஏற்கனவே 2 திருமணங்கள் செய்தவராம்.

2 மனைவிகள்
2 மனைவிகளும் கருத்து வேறுபாடு காரணமாக கணபதியை விட்டு பிரிந்து விட்டனர்.. இப்போது 3வதாக அர்ச்சனாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார் கணபதி.. செல்லமாக வளர்த்து டாக்டருக்கு படிக்க வைத்தால், 3வது மனைவியாகிவிட்டாரே என்ற மன உளைச்சலுக்கு பெற்றோர் இருவரும் ஆளாகி உள்ளனர்.. இதனால் கடந்த சில நாட்களாகவே இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

அதிர்ச்சி
இந்நிலையில் இன்று காலையில் தாமரைச்செல்வன் வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.. அப்போது வீட்டிற்குள் சரளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ந்து போனார்.. உடனே வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தானும் குடித்து விட்டு தாமரை செல்வன் தற்கொலை செய்துகொண்டார்..

சடலம்
நீண்ட நேரமாக இருவரும் வெளியே வராமல் இருந்ததால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது.. அதனால் வீட்டிற்குள் வந்து பார்த்தபோதுதான், 2 பேரும் சடலமாக விழுந்து கிடப்பதை பார்த்து அலறினர்.. உடனடியாக ஊத்துக்கோட்டை போலீசுக்கும் தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த தம்பதியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications