அங்கே சின்னமே சிதறிடுச்சு.. அத்திப்பட்டு துரைக்கண்ணு சொன்னது மோடிக்கு தெரியுமா? திருவள்ளூர் பாஜகவா?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பாஜகவில் திடீர்னு ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. 2 நாட்களாகியும் இந்த சம்பவத்தின் சலசலப்பு இன்னமும் அடங்கவில்லையாம்..!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தின் ஆரணியில், பாஜகவின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும், பாஜக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்..
ஆர்ப்பாட்டம்: பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு நிர்வாகிகளும் உரையாற்ற துவங்கினார்கள்.. அந்தவகையில், அத்திப்பட்டு துரைக்கண்ணு என்பவர் பேச வந்தார்.. இவர் இத்தனை காலமும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.. சில நாட்களுக்கு முன்புதான், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.. பாஜகவின் சாதனைகளை துரைக்கண்ணு பேச துவங்கினார்..
மோடியின் ஒவ்வொரு சாதனைகளையும் சொல்லி முடித்து, "பிரதமர் மோடி 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்திருக்கிறார்? அப்படியிருக்கும்போது, பாஜக என்ன செய்துள்ளது என்று எப்படி கேட்க முடியும்? இப்படிப்பட்ட பெரிய திட்டங்களை செய்துள்ள மோடிக்கு வருகிற தேர்தலில் "கை" சின்னத்திற்கு மறக்காமல் வாக்களியுங்கள்" என்றார் அத்திப்பட்டு துரைக்கண்ணு.
அதிர்ச்சி: இதைக்கேட்டதுமே, மேடையில் நின்றுகொண்டிருந்த வேலூர் இப்ராஹிம் முதல் அனைத்து பாஜக நிர்வாகிகளும் அதிர்ந்து போனார்கள்.. சிலர் மேடையிலேயே சிரித்துவிட்டார்கள்..
இதைப்பார்த்ததும் அத்திப்பட்டு துரைக்கண்ணு குழம்பி போனார்.. எல்லாரும் எதற்காக சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தார்.. பிறகு அருகில் நின்றிருந்த பாஜக நிர்வாகிகள், தாமரை சின்னத்தில் வாக்கு கேளுங்கள் என்று எடுத்து கொடுத்தனர்.
வீடியோ: உடனே சுதாரித்துக் கொண்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு, "நான் ரொம்ப காலமாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்துட்டேன்.. அந்த பழக்க தோஷத்தில், கை சின்னத்திற்கு வாக்கு கேட்டுட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்..
நீங்கள் மறந்தும், "கை" சின்னத்தில் வாக்களித்து விடாதீர்கள். நமது சின்னம் தாமரை சின்னம்... மோடியின் சின்னம் தாமரை சின்னம்.. பாஜகவின் சின்னம் தாமரை... தாமரை மலரும்.. தாமரை மலரும்.. தாமரை மலர்ந்தே தீரும்'' என்றார். மோடிக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்ட பாஜக நிர்வாகியின் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications