திருவள்ளூர் தீ விபத்து.. உடனே எல்லா வீடுகளிலும் தூக்கப்பட்ட கேஸ் சிலிண்டர்கள்! சரக்கு ரயில் எரிந்ததால் பரபரப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் மிக மோசமான தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டீசல் ஏற்றிச் சென்ற ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் கேஸ் சிலிண்டர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் மிக மோசமான ஒரு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சரக்கு ரயில் சென்னை மணலியில் இருந்து டீசல் ஏற்றி வந்ததாகச் சொல்லப்படுகிறது. திருப்பதி நோக்கி சென்ற சரக்கு திருவள்ளூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மெல்லப் பரவியது
பிறகு அது மெல்ல மற்ற வேகன்களுக்கும் பரவுவதால் தீ மோசமாக ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அங்குப் பல மீட்டர் உயரத்திற்குத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. ரயிலில் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக தீ பற்றியதாகச் சொல்லப்பட்டாலும் இது குறித்து உறுதியாக தகவல்கள் இல்லை. தீவிபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் திருவள்ளூர் ஆட்சியர் பிரதீப், எஸ்பி சீனிவாசப் பெருமாள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து குறித்த தகவல்களை எஸ்பியிடம் ஆட்சியர் பிரதீப் கேட்டுத் தெரிந்து கொண்டார். தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications