திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. உ.பி. இளைஞரிடம் போலீஸார் விசாரணை
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் மாந்தோப்புக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசராணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவிபெறும் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி பள்ளி முடிந்து நண்பகலில் வீட்டிற்குச் செல்வதற்காக ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த சிறுமியை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிறுமியை தூக்கிச் சென்று, மாந்தோப்புக்குள் ஆள் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த, ஜூலை 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்தி மொழியில் செல்போனில் பேசிய அந்த மர்ம நபர் மற்றொரு நபரையும் அழைத்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அச்சிறுமி, அந்த மர்ம நபரின் கண்ணில் மண்ணை வாரி துவிவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் சிறுமியை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு சிறுமியிடிம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துல்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த மர்மநபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.
அந்த நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் மர்ம நபரை அடையாளம் காண்பதற்காகவும், துப்பு துலக்கவும் இந்த நபர் குறித்த தகவல்கள் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். மர்ம நபர் குறித்து ஏதேனும் தகவல் மற்றும் விவரம் தெரிந்தால் 99520 60948 என்ற மொபைல் போன் எண்ணுக்கு நேரடி அழைப்பு மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச மாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications