கோழியின் கழுத்தை திருகுவது போல் திருகி.. 10 வினாடி தான்... வந்த வேலையை முடித்த திருடர்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சத்தமில்லாமல் வந்து லாவகமாக திருடி சென்ற திருடர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இருசக்கர வாகனத்தை திருடும் திருடர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் உள்பட எதற்கும் அசார திருடர்கள் கோழியின் தலையை திருகுவது போல் திருகி லாக்கை உடைத்து லாவகமாக பைக்குகளை திருடுகிறார்கள்..

திருடப்படும் இருசக்கர வாகனங்களை மிகவேகமாக பார்ட் பார்ட்டாக பிரிந்து விற்பனை செய்து விடுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறுகலான சந்துகளில் நிற்கக்கூடிய இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு, அதிகாலை வேளைகளில் சென்று பைக்கின் சைடு லாக்கை உடைத்து சில வினாடிகளில் வாகனங்களை திருடும் கும்பல்கள் அவ்வப்போது சிக்குகிறார்கள்
இதுபோன்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் குறைந்த விலையில் வாகனங்களை ஒஎல்எக்ஸில் வாங்குகிறார்கள்.. பின்னர் அதேபோன்ற வாகனத்தை வேறு எங்காவது திருடுகிறார்கள்,. பின்னர் ஓஎல்எக்ஸ்சில் வாங்கிய வண்டியின் சேசிஸ் எண்ணை குறிப்பிட்ட திருட்டு வண்டியில் அச்சடித்து நம்பர் பிளேட் மாற்றி புது வண்டியைப் போல் விற்பது அடிக்கடி நடக்கிறது.
யமஹா, ஸ்பௌண்டர், கரிஷ்மா போன்ற பைக்குகள் அதிகமாக சென்னையில் திருடப்படுகின்றன- திருடப்பட்ட வாகனங்கள் தடம் தெரியாத அளவிற்கு சில நாட்களிலேயே மாற்றப்படுகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே பல இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி ஷேஷ் எண்ணை மாற்றி விற்கும் கும்பல்கள் உலாவுகிறார்கள்.
இந்த சூழலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சத்தமில்லாமல் வந்து லாவகமாக திருடி சென்ற திருடர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வருகிறார்கள்.
முகத்தில் மாஸ்க், அணிந்த படி வந்த இரண்டு பேர் டீசர்ட் அணிந்திருக்கிறார்கள். ஒருவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். ஒருவர் தொப்பி அணிந்திருக்கிறார். தொப்பி அணிந்த நபர் ஸ்பிளண்டர் வண்டியை மின்னல் வேகத்தில் திருடி செல்கிறார். வெறும் 10 வினாடியில் வந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் கிளம்புகிறார்கள். இப்படியாக சிசிடிவி வீடியோ உள்ளது. இதை ஆய்வு செய்த போலீசார் திருடர்களை தேடி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications