போன் பிஸி.. சூப்பர்வைசருடன் சிரித்து பேசிய ஊத்துக்கோட்டை மணிமேகலை.. உடனே திருவள்ளூரில் நடந்தது என்ன
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கம்பெனி சூப்பர்வைசருடன் நெருங்கி பழகியிருக்கிறார் மனைவி. இந்த விஷயம் தெரிந்த கள்ளக்காதலன், அந்த பெண்ணை ஈவிரக்கமே பார்க்காமல் கொன்று விட்டார்.. இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் சுருட்டுப்பள்ளி அடுத்த காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத் (28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் செங்கரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி மணிமேகலை (24) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் மணிமேகலையின் கணவருக்கு தெரியவந்ததால், தனது 3 குழந்தைகளுடன் ஊத்துக்கோட்டை செங்கரையில் உள்ள அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டாராம்.

சூப்பர்வைசருடன் பழக்கம்
இந்நிலையில், மணிமேகலை, தேர்வாய்கண்டிகை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்த ஒருவருடன் சிரித்து பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதலன் இதை துர்கா பிரசாத் கண்டித்துள்ளார். ஆனால் மணிமேகலை அந்த சூப்பர்வைசருடன் பேசிப் பழகுவதை நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த துர்கா பிரசாத், மணிமேகலைக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லையாம்.. போன் பிஸியாகவே இருந்ததால், மணிமேகலை மீது மேலும் ஆவேசம் அதிகமாகி உள்ளது..
காப்புக்காட்டில் மணிமேகலை
இந்த நிலையில், கடந்த நவம்பர் 7-ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் துர்கா பிரசாத்தும் மணிமேகலையும் பைக்கில் சென்றாயன்பாளையம் காப்புக்காடு பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது துர்கா பிரசாத், கம்பெனி சூப்பர்வைசருடன் ஏற்பட்ட பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று மணிமேகலையிடம் கூறியிருக்கிறார்.. உடனே மணிமேகலை வழக்கம்போல் மறுத்துள்ளார். இதனார்ல இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது..
கழுத்தை அறுத்தும் சாகவில்லை
ஏற்கனவே மணிமேகலை மீது ஆத்திரத்திலிருந்த துர்கா பிரசாத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலையின் கழுத்தை அறுத்துள்ளார். ஆனால், மணிமேகலை உயிர் பிரியவில்லை.. இதனால் மணிமேகலையின் முகத்திலும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிமேகலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மணிமேகலை உயிரிழந்ததை உறுதி செய்துகொண்டு, துர்கா பிரசாத் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இதனிடையே, சென்றாயன்பாளையம் காப்புக்காடு பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் ரத்தக் காயங்களுடன் தனியாக இருப்பதாக பென்னலூர்பேட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாய்பிரனித் உள்ளிட்ட போலீஸ் டீம், அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான் அந்த இளைஞர் ஆந்திர மாநிலம் காரணி கிராமத்தைச் சேர்ந்த துர்கா பிரசாத் என்பது தெரியவந்தது.
தனியாக ஏன் நிற்கறீங்க?
போலீசார் அவரிடம் ஏன் அங்கு தனியாக நிற்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்ல, தான் ஒரு பெண்ணுடன் வந்ததாகவும், அந்தப் பெண்ணை காணவில்லை என்றும் சொல்லியுள்ளார்.. அத்துடன் போலீசாருடன் சேர்ந்து மணிமேகலையை தேடுவது போலவும் நாடகமாடியுள்ளார்.
ஆனால் துர்கா பிரசாத் சொல்லும் எந்த தகவலும் நம்பும்படியாக இல்லை என்பதால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை அவரிடம் மேற்கொண்டனர்.. இதற்கு பிறகே துர்கா பிரசாத், மணிமேகலையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்..
பகீர் மணிமேகலை
மணிமேகலை கணவர் பிரிந்து சென்று விட்டார். நான்தான் மணிமேகலையுடன் நெருங்கி பழகி வந்தேன்.. ஆனால், சூப்பர்வைசருடன் மணிமேகலை பேசிப் பழகுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு சொல்லியும் கேட்காததால், அந்த ஆத்திரத்தில் மணிமேகலை கழுத்தை அறுத்தேன்..
ஆனால், கழுத்தை அறுத்த பிறகும் மணிமேகலை உயிருடன் இருந்ததால் முகத்தில் கத்தியால் குத்தினேன். அதில்தான் அவர் உயிரிழந்தார்.. அதற்கு பிறகே அங்கிருந்த தப்பி ஓடினேன்.. ஆனால், என்னுடைய கையிலிருந்த ரத்த காயங்களை பார்த்த ஊர்க்காரர்கள் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தந்துவிட்டனர்.. இதில்தான் நான் சிக்கி கொண்டேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.
இதையடுத்து துர்கா பிரசாத்தை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பென்னலூர்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...!!


Click it and Unblock the Notifications
