விஜய் பொட்டு மாமாவா.. அப்ப சீமான் பொட்டி மாமா.. ஒவ்வொரு தேர்தலிலும் வசூல்.. லயோலா மணி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியல் பரபரப்பு ஓயவில்லை. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தவெகவை விமர்சிக்கிறார்கள். விஜயை பொட்டு மாமா என சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியிடம் வசூல் செய்வதால் சீமானை பொட்டி மாமா என அழைக்கலாமா என்று தவெகவின் லயோலா மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூரில் தவெக நிர்வாகியும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான லயோலா மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சீமான் என்கிற பெயரை பயன்படுத்துவதையே நான் இழிவாக பார்க்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சராக விஜய் உள்ளார். பல கோடி மக்கள் இவர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்து தேர்வு செய்துள்ளனர்.

vijay-is-pottu-mama-then-is-seeman-potti-mama-loyola-mani-s-sharp-attack-over-election-funding

சீமான் பொட்டி மாமா

அவரை பொட்டு மாமா என அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களுக்கும் டைமிங், ரைமிங்காக எல்லாம் பேச தெரியும். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியிலும் சீமான் பொட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் சீமானை பொட்டி மாமா என்று நாங்கள் சொல்லலாமா. இங்கு என்ன பேச்சு போட்டியா நடந்து கொண்டிருக்கிறது. மிகச்சிறப்பான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. காழ்புணர்ச்சி அடிப்படையில் அவர் பேசுகிறார்.

நம்மளும் 16 வருஷமா கட்சி நடத்துகிறோம். கத்துறோம், கதறுகிறோம். மக்கள் ஒரு வாய்ப்பு வழங்கவில்லை. விஜய் முதலமைச்சராகிவிட்டார் என்பதை பொறுக்க முடியாத வயிற்று எரிச்சலில் சீமான் போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வயிறு எரிச்சல் அதிகமாக இருந்தால் ஜெலுசில் வாங்கிக் குடிங்க என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். எப்படி திருடலாம் என்பதை திமுகவை பார்த்துதான் கற்று கொள்ள வேண்டும்.

திமுகவின் புத்தக திருட்டு

ஏ.ஐ மூலமாக எப்படி எல்லாம் திருடலாம் என்பதை அண்மையில் நடந்த புத்தக திருட்டில் வெளிச்சம் போட்டு காட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்து வருகிறோம். அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற போலி பதிப்பகங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை விற்பனை செய்துள்ளனர். பல கோடிகளில் ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இற்கு பின் யார் இருந்தாலும் அவர்களை தண்டிப்போம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+