"அம்மா கணக்கு" மிஸ்ஸாகாது.. பூரிக்கும் திருவண்ணாமலை.. 10ம் வகுப்பு ரிசல்ட்டில் கலக்கிய "அம்மாக்கள்"
திருவண்ணாமலை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகியிருக்கும் நிலையில், மாணவர்களின் வெற்றிக்கு அவர்களது அம்மாக்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்திருக்கிறார்கள்.
இதோ ஒருசில நிகழ்வுகள்: நேற்றைய தினம் வெளியான 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பல்வேறு, ஆச்சரியங்களையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. உதாரணத்துக்கு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேலஞ்சேரியை சேர்ந்த முனுசாமி - தாமரைசெல்வியின் மகள் மோனிஷா..

பொதுத்தேர்வு: இவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது எழுதி கொண்டிருந்தார்.. கணித தேர்வு நடைபெற்ற தினத்தன்று காலையில், முனுசாமி தற்கொலை செய்து கொண்டுஇறந்துவிட்டார்.
ஆனாலும், தந்தையின் இறப்புக்கு இடையிலும் மோனிஷா அன்றைய தினம் கணக்கு பரீட்சை எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், அந்த மாணவி 332 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தந்தை இறந்த சோகத்திலும், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவியை கிராமமக்கள் வெகுவாக பாராட்டினர்.
தஞ்சாவூர்: அதுபோலவே, தஞ்சாவூர் ஞானம் நகரில் வசித்து வருபவர் கல்பனாதேவி. இவரது மகன் தேவன் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்., ஆனால், இவர் அறிவியல் தேர்வு எழுதுவதற்கு முந்தைய நாள், தேவனின் அப்பா பாலக்குமார் இறந்து விட்டார்.
எனவே, தேவன், தன்னுடைய அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டி இருப்பதால், அவனை வெளியே அனுப்ப வேண்டாம் என்று சொந்தக்காரர்கள் கல்பனாதேவியிடம் சொல்லி உள்ளார்கள்.
சபாஷ்: ஆனாலும், உறவினர்கள் பேச்சையும் மீறி, மகனை தேர்வு எழுத அனுப்பி வைத்தார் கல்பனா தேவி. அறிவியல் தேர்வை எழுதி முடித்துவிட்டு வந்துதான், தன்னுடைய அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்தார் தேவன். இப்போது, அந்த அறிவியல் பாடத்தில் 64 மார்க் எடுத்துள்ளார் தேவன்..
திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில், அம்மாவும், மகனும் சேர்ந்தே 10ம் வகுப்பு எழுதியிருக்கிறார்கள்.. இதில் தாயும் - மகனும் இருவருமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
அம்மா கணக்கு: 9-வது வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பை விட்டுவிட்டாராம் நித்யா.. தற்போது கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணியில் உள்ளார் நித்யா. திடீரென நித்யாவுக்கு படிக்கும் ஆர்வம் வந்துவிட்டதால், கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் அவரது மகன் சந்தோஷூடன் சேர்ந்து, தனியார் பயிற்சி மையத்தில் படித்து தனித்தேர்வராக 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

மணப்பாறையிலும் ஒரு மகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி.. 37 வயதாகிறது.. 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்.. இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார்.
தும்மாயிக்கு ஆசை: இவரது மகள் யோகேஸ்வரியும், தும்மாயி வேலை பார்க்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.. தும்மாயி இந்த வருடம் 10ம் வகுப்பு தேர்வு எழுத ஆசைப்பட்டார். இந்த விஷயம் தெரிந்ததுமே, வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தும்மாயிக்கு பெருமளவு ஊக்கம் தந்தனர்..
காலை பள்ளிக்கு சென்று உணவை தயார் செய்து மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, பிறகு, மணப்பாறையிலேயே ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தார் தும்மாயி. இந்த முறை தனித்தேர்வராகவும் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் தும்மாயி, 500க்கு 358 மார்க் எடுத்துள்ளார்.. ஆனால் மகள் யோகேஸ்வரி, 353 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதாவது, மகளை விட 5 மார்க்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் தும்மாயி.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications