17 வயசு பையன்.. 2 பிள்ளைகளின் தாய் செய்யும் வேலையா இது.. செய்யாறு அருகே அதிர்ச்சி
Recommended Video

செய்யாறு: 2 பிள்ளைகளை பெற்ற தாய் 17 வயசு பையனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் 2 பேரையுமே போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவன் பாலு. இவர் செய்யாறு அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார்.
கலசபாக்கம் அடுத்த பொற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி. இவருக்கு 27 வயதாகிறது. கல்யாணம் ஆகி ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

அம்மா வீடு
ஆனால் புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு பிரிந்து வந்துவிட்டார். அப்போது பெற்றெடுத்த இரண்டு குழந்தைகளையும் கணவனிடமே கொடுத்துவிட்டு, அம்மா வீட்டுக்கு கிளம்பி விட்டார். அம்மா வீட்டு தெருவில்தான் அந்த பாலுவின் வீடும் இருக்கிறது.

நம்பர் பரிமாற்றம்
அதனால் அடிக்கடி தெருவில் பார்த்துகொண்டனர், சிரித்து கொண்டனர், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தனர், ஒருத்தருக்கொருத்தர் செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு எந்நேரமும் போனிலேயே இருந்தனர்.

வீடு திரும்பவில்லை
இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலேஜூக்கு சென்ற பாலு, திரும்பவும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதட்டமான பெற்றோர், காலேஜூக்கு போன் செய்து, மகன் இன்னும் வீடு திரும்பவில்லை என்றனர்.

அக்கா வந்தாங்க..
அதற்கு கல்லூரி நிர்வாகிகள், "காலைலயே அவங்க அக்கா ஹேமாவதி வந்து கூட்டிட்டு போய்ட்டாங்களே, உங்க வீட்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க, தம்பி வந்தாதான் பிரச்சனையை சரி பண்ண முடியும் என்று சொன்னாங்க. அதனால ஒரு லட்டர் எழுதி வாங்கி கொண்டு மாணவனை அனுப்பி வைத்தோம்" என்றனர். ஹேமாவதி பாலுவை தம்பி என்று சொல்லி அழைத்து சென்றதை அறிந்த பெற்றோர் ஷாக் ஆனார்கள்.

தேடி வருகிறார்கள்
உடனடியாக அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார்கள். ஹேமாவதி என்பவர் யார் என்றே தெரியாது, தங்கள் மகனை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதால், எப்படியாவது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கதறினார்கள். இது சம்பந்தமான புகாரை பெற்று கொண்ட போலீசாரும் மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications