ஊரே ஒன்று கூடியது.. திருவண்ணாமலையில் கோடீஸ்வர இளம் பெண்கள் இருவர் செய்ததை பாருங்கள்
Recommended Video

திருவண்ணாமலை: ஆன்மீக பாதையில் துறவரம் மேற்கொள்ளும் கோடீஸ்வரர்களின் இரண்டு மகள்களை அனைவரது முன்னிலையிலும் நடைபெற்ற வழியனுப்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள் தர்மிசந்த் ,சௌவுக்கார் குடும்பத்தினர். இவர்கள் சாயார் குழுமம் என்ற பெயரில் இருசக்கர வாகனங்கள், கார் விற்வனையாளர்கள், நகை கடைகள், நகை அடகு கடைகள், ஆயில் விற்பனை என பல தொழில்களில் கடந்த 60 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் கோடீஸ்வரர்களாக உயர்ந்த குடும்பத்தினர். சாயார் குடும்பத்தினர் என திருவண்ணாமலையில் அனைவராலும் மரியாதையோடும், அன்புடனும் அழைக்கப்படும் இந்த குடும்பத்தாரின் இரு மகள்கள் தங்களது கோடீஸ்வர வாழ்க்கையை துறந்து விட்டு துறவரம் மேற்கொள்ளும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடைபெற்றது.

அக்காள், தங்கை
சாயார் குழுமத்தில் மூத்தவர் கௌதம் குமார், மற்றும்
இவரது தம்பி அரவிந்த்குமார் ஆகியோர் சமண (ஜெயின்) மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் இருவர்களின் மகள்கள் ப்ரேக்ஷ மற்றும் ஸ்வேதா. எம்பிஏ மற்றும் சிஏ பட்டதாரிகள். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தான் துறவரம் மேற்கொள்ள போவதாக இருவரும் தங்களின் குடும்பத்தார்களிடம் கூறியுள்ளனர். இதனை கேட்ட இருவரது குடும்பத்தார்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். துறவரம் வாழ்க்கை, அதிலும், குறிப்பாக சமண மதத்தில் உள்ள துறவர வாழ்க்கை எப்படி கஷ்டமானது என்றும் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்த உங்களால் இது முடியாது என்றும் பல காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உறுதியான பெண்கள்
ஆனால், தாங்கள் துறவரம் மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதாக சகோதரிகள் தெரிவித்துள்ளனர். சமண மதத்தில் துறவரம் மேற்க்கொண்டால் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். எங்கும் நடந்தே செல்லவேண்டும், தங்களது துணிகளை தாங்களே தூக்கி செல்ல வேண்டும், தங்களுக்கு தேவையான உணவை பிச்சை எடுத்து மாலை 6 மணிக்குள் உண்ணவேண்டும். 3 ஆடைகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும், குடும்பத்தாரிடம் பாசபிணைப்பு இருக்க கூடாது, தங்களது தலை முடியினை தாங்களே எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

நன்னடத்தை
ஆனால் சிறு வயதில் பெண் துறவிகளுக்கு சேவகம் செய்யும் போது தாங்களும் துறவிகளாக வேண்டும் என்று எண்ணம் எழுந்ததாகவும், ஆகவே தாங்கள் உறுதியாக துறவரம் மேற்கொள்ள போவதாகவும் இருவரும் கூறினர். இதனையடுத்து இவர்கள் கடந்த 3 வருடங்கள் 8 மாதங்களாக ராஜஸ்தானில் உள்ள மதக்கல்லூரியில் கொட்டும் மழையிலும், கடும் வெய்யிலிலும், கடுங்குளிரிலும்
சமயநெறி பயின்று வரும் நவம்பர் மாதம் 11ம் தேதி நன்னெறி, நன்னடத்தைகளை பரப்ப துறவரம் மேற்க்கொள்ள உள்ளனர்.

நூற்றாண்டின் முதல் துறவரம்
திருவண்ணாமலை நகரில் கடந்த 125 ஆண்டுகளில் இது வரை ஜெயின் சமூகத்தில் இளம் பெண்கள் துறவரம் மேற்கொள்ளவில்லை. இவர்கள்தான் முதன் முறையாக துறவரம் மேற்கொண்டு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. துறவரம் மேற்கொள்ளும் ப்ரேக்ஷ மற்றும் ஸ்வேதா ஆகியேரை வழியனுப்பும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, நகை கடை அதிபர்கள்,தொழில் அதிபர்கள், வணிகர்கள் மற்றும் ஆன்மீக வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இருவரையும் அமர வைத்து ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்திற்க்கு அழைத்து வந்தனர்.












Click it and Unblock the Notifications