பாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை!
பள்ளி பேருந்தில் 8 அடி நீள சாரை பாம்பு ஒன்று பிடிபட்டது
ஆரணி: ஸ்கூலுக்கு போகணும்னு ஆசை வந்துடுச்சோ, என்னவோ... ஸ்கூல் பஸ்ஸிலேயே ஏறி வசதியாக சுருண்டு படுத்து கொண்டது ஒரு பாம்பு!
ஆரணியை அடுத்த புதுப்பாளையம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கு சொந்தமாக பஸ் உள்ளது.
இதனால் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்கள் பெரும்பாலும் அந்த பஸ்ஸில்தான் பள்ளிக்கு சென்று வருவார்கள்.

இப்படித்தான் பஸ் வந்து நின்றது. ஆனால் அந்த பஸ்ஸுக்குள் 8 அடி நீளத்துக்கு ஒரு சாரைப்பாம்பு படுத்து கொண்டிருந்தது. இது தெரியாத பிள்ளைகள் முண்டியடித்து கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள். அதுவரை அமைதியாக தூங்கி கொண்டிருந்த பாம்பு, பிள்ளைகள் போட்ட சத்தத்தால் டென்ஷன் ஆகி சர்ரென தனது தலையை வெளியே தூக்கி காட்டியது.
பாம்பை பார்த்ததும் மாணவர்கள் அலறி அடித்து கொண்டு கீழேஇறங்கி ஓடினார்கள். இதை பார்த்த டிரைவருக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் அதுவரை அந்த பஸ்ஸில் இருந்தது பாம்பும் டிரைவரும் மட்டும்தான்.
வண்டிக்குள் எப்போ ஏறியது என்றே அவருக்கும் தெரியவில்லை. இதனால் தடாலடியாக ஒரு பிரேக்கை போட்டு வண்டியை நிறுத்தி அவர் ஒரு பக்கம் இறங்கி குதித்து ஓடினார். இந்த பரபரப்பு, பதட்டத்தை பார்த்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து பாம்பை வெளியே எடுத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications