16 வயது சிறுமியுடன் 3 வருட பழக்கம்.. திடீரென கத்தியால் குத்திய இளைஞர்., சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி : 16 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான இளைஞர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் வயது 30,சென்னை வேளச்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் சின்ன சேலத்தைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது சிறுமிக்கும் சதீஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சிறுமியை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.சிறுமிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, சிறுமி உயிர் பிழைத்துக் கொண்டார். சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் சதீஷ் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சேலம் உடையாப்பட்டி பைபாஸ் அருகிலுள்ள பெருமாள் கோவில்மேடு பகுதியில் இருக்கும் மரங்கள் அடர்ந்த புதரில் சதீஷ் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை மீட்டனர், சதீஷின் சட்டைப்பையில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார்.

அதில் சிறுமி தன்னை டார்ச்சர் செய்ததாகவும் இதனால் மனமுடைந்து சிறுமியை கத்தியால் விட்டு தப்பி ஓடி வந்ததாகவும் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சதீஷின் செல்போன், இருசக்கர வாகனம், சிறிய ஸ்டூல், கயிறு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே சதீஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உடனே சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார்.
-
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications