Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அமைச்சர்கள் 10வது ஃபெயில்.. 8வது பாஸ்! இவங்க எதுக்கு நீட் பத்தி பேசனும்? அண்ணாமலை கேள்வி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 10, 12வது படித்துள்ள தமிழக அமைச்சர்கள் நீட் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி சார்பில் லட்சக்கணக்கான கையெழுத்து பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து பேச தமிழக அமைச்சர்களுக்கு உரிமை இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai criticizes the education qualification of Tamil Nadu ministers

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் என் மண், என் மக்கள் யாத்திரை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேற்குறிப்பிட்டவாறு பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "ஒரு ஏழை குழந்தை அரசு மருத்துவமனையில் படிக்கிறது எனில் அதற்கு நீட் மட்டுமே காரணம். காமராஜர் படிக்காத மேதை. பி.எச்.டி படித்து இருந்தாலும் கூட அவருடைய அறிவுக்கு அது ஈடாகாது அவரை விட்டு விடுவோம். ஆனால் இன்று தமிழக அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு நீட்டுக்கு எதிராக பேசுகிறவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

உள்ளாட்சித் துறையின் உடைய அமைச்சர் கே.என்.நேரு படித்திருப்பது 12ம் வகுப்பு, அமைச்சர் கே.கே.எஸ் .எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 8வது பாஸ் 10வது ஃபெயில், அமைச்சர் தாமோ அன்பரசன் 11ம் வகுப்பு, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 10 வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி 12ம் வகுப்பு, அமைச்சர் ஆர்.காந்தி 1960களில் 10ம் வகுப்பு, பி.மூர்த்தி 12ம் வகுப்பு, சேகர்பாபு 10ம் வகுப்பு, செஞ்சி மஸ்தான் 8ம் வகுப்பு படித்திருக்கிறார்.

குறைவாக படித்தவர்கள் குறித்து நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. குறைவாக படித்தவர்களில் மேதைகள் இருக்கிறார்கள். ஆனால், படிப்பை பற்றி தெரியாதவர்கள் எதற்காக நீட்டை பற்றி பேச வேண்டும்? கல்வியின் மூலமாக முன்னேற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் மாணவர்களுக்கும் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.

நம்முடைய குழந்தைகளுக்கு கடின உழைப்பு பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஆனால், இன்று கல்வி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சி அமைச்சரானவர்கள், மணல் லாரி ஓட்டி, சென்னையில் தண்ணி லாரி ஒட்டி அமைச்சரானவர்கள், அரசியலில் தூய்மை, நேர்மை என என்னவென்று தெரியாதவர்கள் நீட்டை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக அமைச்சர்கள் கட்டியுள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில், அவர்கள் கட்சி தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக சீட் கொடுப்பார்கள் என்று சொல்லுங்கள் நானும் உங்களுடன் நீட் வேண்டாம் என்று சொல்கிறேன்" என பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+