ஆரணியில் மனைவி பிரிந்து போனதால் பள்ளி மாணவியிடம் விழுந்த கணவர்.. திருவண்ணாமலை அடுத்து நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: இளம் வயது விவாகரத்துகள் பெருகி கொண்டிருக்கின்றன.. அதேபோல தகாத உறவுகள் அதிகமாகி, அதன்மூலம் தற்கொலைகள், கொலைகளும் அதிகரித்து வருகின்றன.. இதோ திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஒரு குடும்ப வன்முறை வெடித்துள்ளது.. மனைவி பிரிந்து போய்விட்டார் என்பதற்காக, பள்ளி மாணவியை காதலித்துள்ளார் கூரியர் ஊழியர்.. இப்போது அவருக்கு வந்த நிலைமையை பாருங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ளது முக்குறும்பை ஊராட்சி.. இங்குள்ள அனந்தபுரம் என்ற கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 வயதாகிறது. ஆரணியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்..

அம்மா வீட்டுக்கு போன மனைவி

இவரது மனைவி பெயர் தமிழ்பிரியா. ஆனால், தம்பதிக்கு இடையே நிறைய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், சண்டைகள் வலுத்து வந்தன.. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கணவரை பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.. மனைவி பிரிந்து சென்ற நிலையில் வடிவேலு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்து, மகளை கண்டித்துள்ளனர்.. அதேபோல உறவினர்களும் மாணவிக்கு அறிவுரை சொல்லி, வடிவேலுவுடன் பழகுவதை நிறுத்திவிடுமாறு வலியுறுத்தி வந்துள்ளனர்.

கட்டுக்கடங்காத காதல்

ஆனாலும், யார் சொல்லியும் மாணவி அவர்களது பேச்சை கேட்கவில்லை.. இதுதொடர்பாக கடந்த 20 நாட்களுக்கு முன்புகூட தகராறு வெடித்துள்ளது.. உடனே இந்த விஷயம் ஊர் பெரியவர்கள் வரை சென்றிருக்கிறது.. அவர்களும் மாணவிக்கு புத்தி சொல்லி உள்ளார்கள்.

அப்போதுகூட வடிவேல், மாணவியிடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் அப்பா சங்கர்(46), வடிவேலை கொன்றுவிடுவதென முடிவு செய்துள்ளார்.

இதற்காக நேற்று காலை, முக்குறும்பை அருகே அனந்தபுரம்- களம்பூர் செல்லும் சாலையில் உள்ள சிவன் கோயில் பக்கத்திலேயே சங்கர் காத்திருந்தார்.. அவருடன் உறவினர் சிவஞானம் (48) என்பவரும் வடிவேலுவை கொலை செய்ய சங்கருடன் காத்து கொண்டிருந்தார்.

கட்டையாலேயே சாய்த்த அப்பா

அப்போது வழக்கம்போல் கூரியர் ஆபீசுக்கு செல்வதற்காக, பைக்கில் வடிவேலு வந்துள்ளார்.. அவரை வழிமறித்த சங்கர், தன்னுடைய மகளுடன் பழகுவதை கைவிட வேண்டும் என்று சொல்லி உள்ளார்.. இதனால் சங்கருக்கும் வடிவேலுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சங்கரும், சிவஞானமும் வடிவேலை கட்டையாலும், கற்களாலும் சரமாரி தாக்கி உள்ளனர். இதில் வடிவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

ஆரணி சாலையில் பரபரப்பு

அதற்குள் களம்பூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து வடிவேலுவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்குள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வடிவேலின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் களம்பூர் பஸ் ஸ்டாண்டில்., ஆரணி-போளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டு, முழக்கமிட்டனர்.. இந்த விஷயம் அதிகாரிகளுக்கு தெரிந்து, விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பியதுடன், கொலையாளிகள் சங்கர், சிவஞானம் ஆகியோரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+