திருவண்ணாமலை அருகே காதலியின் திருமணத்தை நிறுத்தியதால்.. வாழ்நாளில் இதுவரை பார்க்காத இடத்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி என்பவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் செய்யாறைச் சேர்ந்த இளம்பெண் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண் காதலை முறித்துக் கொண்டார். திருமணமும் வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனது. இதனால் ஆத்திரப்பட்டு செய்த செயலால் பாலாஜி இப்போது கம்பி எண்ணி வருகிறார்.

காதலிக்கும் போது ஒன்றாக ஜாலியாக இருக்கும் காதலர்கள், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதல் முறிவை சந்திக்கும் போது ஏற்க மறுக்கிறார்கள்.இருவருமே தங்கள் காதலன், காதலிக்கு எதிராக ஏதாவது வில்லங்க வேலைகளை செய்து நடக்கிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் பார்க்காத ஒரு இடமான ஜெயிலை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Balaji is in jail for stopping his girlfriend s wedding near Tiruvannamalai

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா இளநகர் கிராமத்தை சேர்ந்த 23 வயதாகும் பாலாஜி என்பவர் ஜே.சி.பி டிரைவர் ஆவார். இவரும் செய்யாறு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தனர்.

முதலில் நட்பாக இருந்த பழக்கம் பின்னர் காதலர்களாக மாறியிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக இருவரும் நெருக்கமாக பழகியதில் செல்போனில் ஒன்றாக செல்பி எடுத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாலாஜிக்கு வேறு பெண்ணுடன் திருமணமான தகவல் பட்டதாரி இளம்பெண்ணுக்கு தெரியவந்ததால் பாலாஜியுடன் பழகுவதை நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் செய்யாறு பகுதி இளம் பெண்ணுக்கு ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய கடந்த 6-ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அதனை தெரிந்துகொண்ட மாப்பிள்ளை ஊரான ஏனாதவாடி கிராமத்திற்கு சென்று திருமணம் செய்ய உள்ள இளைஞரிடனம் ஏற்கனவே தன்னுடன் அந்த பெண் செல்போனில் எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறி நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் பாலாஜி தான் காதலித்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தன்னிடம் பேசுமாறும், நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள ஆனால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராம் இன்டர்நெட்டில் பதிவிட்டு அசிங்கபடுத்துவேன் என்று காதலித்த பெண்ணின் ஊருக்கே சென்று நேரிலும் மிரட்டியதாக அந்த பெண் புகாரில் குற்றம்சாட்டினார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இந்த தகவலைகளை கூறி புகார் அளித்த நிலையில், அதன் பேரில் பெற்ற அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தன்னை காதலித்த பெண்,திருமணம் செய்ய மறுத்த நிலையில்,அதற்கு எதிர்வினையாக இளைஞர் செய்த செயல்,அவர் வாழ்நாளில் இதுவரை பார்க்காத ஒரு இடமான சிறையில் போய் நிறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+