இல்லம் தேடிக் கல்வி திட்டம்! 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
திருவண்ணாமலை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் தொடக்க விழா இன்று நண்பகல் நடைபெறவுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 2 லட்சமாவது மையம் தொடங்கப்படுவது கவனிக்கத்தக்கது.

இல்லம் தேடிக் கல்வி
கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை வழங்கப்பட்டது.

தன்னார்வலர்கள்
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக இதுவரை 7.26 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு லட்சம் தன்னார்வலர்கள் கற்பிக்கும் சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 34 லட்சம் மாணவர்கள் பாடம் கற்று வருகின்றனர். ஆரம்பத்தில் சுமாராக இருந்த இந்த திட்டம் இப்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
இதற்கு காரணம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இடைவிடாத தொடர் நடவடிக்கைகள் ஆகும். இதனிடையே இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையம் திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இன்று தொடங்கப்படுகிறது. இந்த விழாவில் நண்பகல் 12 மணியளவில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்த மையத்தை தொடங்கி வைக்கிறார்.

காணொலி வெளியீடு
மேலும், இல்லம் தேடிக் கல்வி தொடர்பாக காணொலி ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து தொடர் வாசிப்பு இறுதிப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் வழங்கி புகைப்பட புத்தகத்தையும் முதல்வர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, கீழ் பென்னாத்தூர் சோமாசிபாடி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உள்ளடக்கிய இல்லப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
-
எஸ்ஐ கவிதா ஜெயிலுக்குள்ளேயே செய்த காரியம்.. அந்த செல்போனை பார்த்தால்? அதிர்ச்சியில் காவல் துறை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications