திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தோல்வி முகம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election Results 2019 : கொங்கு மண்டலத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக -அதிமுக- வீடியோ

    திருவண்ணாமலை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 38 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி சுமார் 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

    இடைத்தேர்தல் அச்சத்திலேயே உழன்ற அதிமுக மக்களவை தேர்தலை கணக்கிலேயே எடுத்து கொள்ளவில்லை போலும் வெறும் 2 மக்களவை தொகுதிகளில் மட்டுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது

    DMK candidate in Tiruvannamalai constituency is the lead .. Agri Krishnamoorthy Face of Failure

    மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது எனினும் தமிழகத்தை பொறுத்த வரை திமுக அதிக எம்பிகளை பெற உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போல தான் நிலைமை உள்ளது

    இதில் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அண்ணாதுரை 81,366 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 47, 657 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்

    தமிழக அளவில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியை ருசித்தாலும், தேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கும் தேவையானன இடங்களை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது திமுகவினரின் உற்சாகத்தை பாதித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+