துரைமுருகன் வீட்டில் ரெய்டு.. தேமுதிக மீது கை வைத்தால் இதுதான் கதி.. பிரேமலதா பாய்ச்சல்!

தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடந்த ரெய்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.

தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரேமலதா பிரச்சாரம்

பிரேமலதா பிரச்சாரம்

திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்கு சேகரித்தார். அவர் திமுக மீது மிக கடுமையான விமர்சனங்களை வைத்தார். முக்கியமாக திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

பிரேமலதா பேச்சு

பிரேமலதா பேச்சு

பிரேமலதா தனது பேச்சில், தேமுதிகவை அவமானப்படுத்த நினைத்த திமுக பொருளாளர் துரைமுருகன் தற்போது வருமானவரித்துறை சோதனையால் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார். தேமுதிகவை சீண்ட நினைத்து தற்போது தோல்வி அடைந்து இருக்கிறார் துரைமுருகன். அவர் பேசியதன் பலன் இது.

யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

தேமுதிக பலம்

தேமுதிக பலம்

தேமுதிக எவ்வளவு வலிமையான கட்சி என்று இப்போது தெரிந்து இருக்கும். தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. துரைமுருகன் மட்டுமல்ல திமுகவினரும் இனியாவது எங்களின் பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

திமுக பணம்

திமுக பணம்

திமுக மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க பார்க்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்காது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். திமுக வேட்பாளர்கள் அனைவரது வீடுகளிலும் வருமானவரிதுறை சோதனை நடத்த வேண்டும், என்று பிரேமலதா பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+