திருவண்ணாமலை எ.வ.வேலு வேட்பு மனுவில் வயது சர்ச்சை.. அதிமுகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஏற்பு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது வேட்புமனுவில் வயதை குறைத்து காட்டியுள்ளதாக குற்றம்சாட்டிய அதிமுகவினர், அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். எனினும் பரிசீலனைக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எ.வ.வேலு,பாஜக வேட்பாளர் சி.ஏழுமலை,தவெக அருள் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி விக்னேஷ் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நேற்று 6ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 287 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

EV Velu s Nomination Paper Accepted in Tiruvannamalai Amidst AIADMK Opposition

குறிப்பாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 43 வேட்பாளர்களும், செங்கம் 35 ஆரணி 37 கீழ்பெண்ணாத்தூர் 37 போளூர் 35 கலசபாக்கம் 40 வந்தவாசி 31 செய்யாறு 29 என மொத்தம் 287 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்ததை திருவண்ணாமலை மாவட்டத்தில் அந்தந்த தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் பரிசீலனை நடந்தது. இதில் வேட்பாளர்கள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனை தேர்தல் அலுவலர் செல்வம் மற்றும் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் காலை 11 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.

அப்போது திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு முதல் முறையாக 1984 ஆம் ஆண்டு போட்டியிடும்போது 10.10.1945 அன்று பிறந்ததாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாராம். அதன் பின்னர் நடைபெற்ற 2001 ஆம் சட்டமன்ற தேர்தலில் 15.03.1951 பிறந்ததாகவும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 15.03.1950 ஆக கூறினாராம். பின்னர் அடுத்து நடைபெற்ற 2016 ஆம் சட்டமன்ற தேர்தலில் 15.03.1951 என்றும் மாறி மாறி தனது பிறந்த தேதியை குறிப்பிட்டிருந்தாராம். இதுபற்றி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்சட்டப்பேரவை புத்தகத்தில் உள்ள வயது மற்றும் பிறந்த தேதியை காட்டி தேர்தல் அலுவலரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி தேர்தல் அலுவலர் செல்வம் அமைச்சர் எ.வ.வேலுவின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் வெளிநடப்பு செய்து வெளியே வந்த அதிமுக அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் செய்தியாளரிடம் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் அமைச்சராக இருக்கக்கூடிய எ.வ.வேலு வேட்பு மனு தாக்கலில் தனது வயதை ஒவ்வொரு தேர்தலிலும் குறைத்து காட்டி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளார். ஆகவே அமைச்சர் எ.வ.வேலு வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என நாங்கள் தேர்தல் அலுவலகம் முறையிட்டோம்.. ஆனால் அவர் அமைச்சர் எ.வ.வேலுவின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யாமல் ஒருதலைப் பட்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எ.வ.வேலு,பாஜக வேட்பாளர் சி.ஏழுமலை,தவெக அருள் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி விக்னேஷ் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+