கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்
சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கடலூர் மாவட்டம், முஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் என்பவர் படித்து வருகிறார். தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா என்ற ரித்து என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்துள்ளார். இந்நிலையில் காதலிக்கும்போது சசிகுமார் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கல்லூரி மாணவரை நண்பர்களை வைத்து காதலிசெய்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
இன்றைக்கு கண்டதும் காதல், இன்ஸ்டாவில் பழகினால் காதல் என்று காதலிப்பதற்கு வரைமுறையே கிடையாது. இனக்கவர்ச்சியை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு இன்றைய தலைமுறை இளைஞர்கள், பெண்கள் வாழ்க்கையில் தவறான முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை காலி செய்கிறது. ஒரு இளம் ஜோடி காதல் என்ற பெயரில் பழகி உள்ளது. அதில் காதலனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

கடலூர் மாவட்டம், முஷ்ணம் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் சசிகுமார் என்பவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சசிகுமார், 'இன்ஸ்டாகிராம்' மூலம் தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா என்ற 21 வயதாகும் ரித்து என்ற பெண்ணிடம் பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
காதலியான பின்னர் ரித்திகா, பல்வேறு காரணங்களை சொல்லி சசிகுமாரிடம் இருந்து அடிக்கடி சிறிது சிறிதாக பணம் பெற்றதாக தெரிகிறது. இதுவரை மொத்தம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் வரை ரித்திகாவுக்கு சசிகுமார் கொடுத்துள்ளராம். ஒரு கட்டத்தில் ரித்திகா, வேறொரு வாலிபரை காதலிப்பது சசிகுமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி ரித்திகாவிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
கல்லூரி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை காதலியிடம் கொடுத்துவிட்டதால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் பகுதி நேரமாக சசிகுமார் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். மேலும் கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் காதலிக்கும்போது தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி ரித்திகாவிடம், சசிகுமார் கேட்டார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகுமாரை தொடர்பு கொண்ட ரித்திகா, கோயம்பேடு வருமாறு அழைத்தார். அதன்படி கோயம்பேடு வந்த சசிகுமாரை காரில் தாம்பரம் கடத்திச்சென்றாராம். அங்கு அவரது தோழி மற்றும் நண்பர்கள் என மேலும் 3 பேருடன் சேர்ந்து சசிகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தார்களாம். இதில் காயம் அடைந்த சசிகுமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரித்திகா, அவரது தோழி தர்ஷினி (19), நண்பர்களான சஞ்சய் (22), சரவணன் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications