“21 ஆம் நூற்றாண்டின் உத்தமர் காந்தி வந்துள்ளார்".. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பற்றி எவ வேலு கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: "21 ஆம் நூற்றாண்டின் உத்தமர் காந்தி திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராக வந்துள்ளார்." என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கிண்டலாக விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி ஏரியில் மண் அள்ளிய விவகாரம் குறித்து, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இன்று திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்தில் இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர்.

Former DMK Minister EV Velu Mocks Aadhav Arjuna as 21st Century Gandhi

திருவண்ணாமலையில், 2025 டிசம்பர் 14ல் திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. அப்போது, மாநாட்டு திடலை சமன் செய்ய, மலப்பாம்பாடி ஏரியிலிருந்து அனுமதியின்றி, 8 ஏக்கர் பரப்பில், மண் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு, 8.22 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அறப்போர் இயக்கம் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராக, முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் எ.வ.வேலு.

அப்போது பேசிய அவர், "என் மீது பொய்யான வழக்கைத் திட்டமிட்டு தவெக அரசு பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன். எனக்கு நீதிமன்றங்களின் மீது அளப்பரிய நம்பிக்கை உள்ளது. சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.

மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர்வதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது. மக்களை ஏமாற்றி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது.

காந்தியாரை எல்லாம் நான் பார்த்தது கிடையாது. 21 ஆம் நூற்றாண்டின் உத்தமர் காந்தி திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராக வந்துள்ளார். அதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+