கண்ணெல்லாம் சிவந்து.. பரட்டை தலையுடன்.. தட்டு தடுமாறி.. இவர்தான் மனோகர்.. ஸ்கூல் எச். எம்
வகுப்பறையில் மது அருந்திய தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகிறது.
Recommended Video

திருவண்ணாமலை: புளூ கலர் சட்டை.. பரட்டை தலை.. என கண்கள் சிவந்து போய்... பள்ளியில் சேர் ஒன்றில் தட்டு தடுமாறி நெளிந்து உட்கார்ந்திருந்தார் மனோகர்... இவர்தான் அந்த ஸ்கூல் ஹெச்.எம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் நீர்தொம்பை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் படவேடு அருகே அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஜவ்வாது மலையில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளது. பல கிராமங்களில் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்தான் மனோகரன்.

புளூ சட்டை
பெல் அடித்தவுடன் பிள்ளைகள் பையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடுவதுதான் முதல் வேலை என்றால், இவருக்கு கோழி பிரியாணியும், குவார்ட்டரும்தான் தினசரி பழக்கமே. இப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. புளூ சட்டை போட்டு கொண்டு உட்கார்ந்திருப்பது மனோகரன்தான். கிளாஸ் ரூம் எதிரிலேயே உட்கார்ந்திருக்கிறார்.

மணி 5.10
எந்த நேரத்தில் குடித்து தொலைத்தார் என தெரியவில்லை. அங்குள்ள கடிகாரத்தில் மணி 5.10 ஆகிறது. அப்படி என்றால் இது வேலை நேரமா என்று தெரியவில்லை. பிள்ளைகள் அந்த சமயத்தில் எங்கே இருந்தார்கள் என்றும் தெரியவில்லை. கிளாஸ் ரூமுக்குள் அவர்களின் புத்தகப்பைகள் உள்ளன.

குவார்ட்டர், ஸ்நாக்ஸ்
அங்கிருக்கும் டேபிளில் ஒரு பாத்திரத்தில் பிரியாணி, குவார்ட்டர், ஸ்நாக்ஸ், கொஞ்சம் சாதம், குழம்பு என்று பரப்பி வைக்கப்பட்டிருக்கிறது. குவார்ட்டர் காலியாகி கிடக்கிறது. பிரியாணியை கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கிறார் மனோகரன்.

யார் பொறுப்பு?
பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே இப்படி இருந்தால், அந்த பள்ளி எந்த லட்சணத்தில் இருக்கும்? பள்ளி மாணவர்களின் எதிர்காலம் நாளை என்னாகும்? மலைவாழ் கிராம பிள்ளைகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்தால் எந்த மாதிரியான ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள்? நாளை அவர்கள் பாதை தவறி போனால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? என்றெல்லாம் கிலியை ஏற்படுத்துகிறது.
|
கடும் நடவடிக்கை
இப்படி ஒரு வீடியோ வைரலாகி வருவதால், இதனை அடிப்படையாக வைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான நடவடிக்கை மட்டும் இல்லாமல் இதுபோன்ற ஒழுங்கீனமானவர்கள், தவறான முன்னுதாரணமாக விளங்கக்கூடியவர்களின் கல்வி அங்கீகாரத்தையும் ரத்து செய்வதே இளம் தளிர்களின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications