பாஜகவின் முகமூடியாக அதிமுக மாறியது உண்மைதான்.. அர்ஜுன் சம்பத் பேட்டி
திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி அடித்து வீசுகிறார் , அவரது ஜனநாயகன் படத்தை அவரே ரிலீஸ் செய்து கொண்டார், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சிக்க அருகதை அற்றவர் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். பாஜகவின் முகமூடியாக அதிமுக மாறியது உண்மைதான் என்றும் கூறினார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிச்சாமி கோவில் நகரங்கள் அனைத்தையும் பாஜகவிற்கும் தாமரைக்கும் ஒதுக்கியுள்ளார். திருவண்ணாமலையில் உலக அளவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் சூழலில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்த உடன் திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு தொகுதி மறுவரையறை ஆகிய சட்டங்களை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.
நடிகர் விஜய் தேர்தலுக்காக வாக்குறுதிகளை அள்ளி அடித்து வீசுகிறார் , அவரது ஜனநாயகன் படத்தை அவரே ரிலீஸ் செய்து கொண்டார், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சிக்க அருகதை அற்றவர் ஜோசப் விஜய் " இவ்வாறு கூறினார்.
பாஜகவில் முகமூடியாக அதிமுக செயல்படுகிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு உண்மைதான் என்று பதில் கூறினார். மத்திய மாநில அரசுகளின் உறவுகள் சுமூகமாக இருந்தால் தான் நல்ல வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்றும் வளமான தமிழகம் வலிமையான பாரதம் கிடைக்கும். அதிமுக பாஜக இயற்கையான கூட்டணி. முகமூடி என்பது தவறான பொருள்" இவ்வாறு கூறினார்.
பெண்களுக்கு திமுக வின் துரோகம் pic.twitter.com/WscDU8eGc8
— Arjun Sampath (@imkarjunsampath) April 18, 2026
முன்னதாக கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது அர்ஜுன் சம்பந்த் விஜய் குறித்து கூறும் போது, விஜய் ஒவ்வொரு முறை பிரச்சாரத்திற்கு வரும்போதும் அவரது செல்வாக்கு குறைவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழக்கும் என்றும் கூறியிருந்தார். விஜய் கூட்டணியை சரியாக அமைத்துக் கொள்ளவில்லை என்றும், அவர் மனைவியுடனே கூட்டணி சரியாக அமைத்துக் கொள்ளாதவர் என்றும் கடுமையாக ஒரு முறை விமர்சித்துள்ளார்.
அதேபோல் மதுரையில் விஜய் நடத்திய மாநாடு டாஸ்மாக் கடை போல இருந்ததாகக் குறிப்பிட்டு, தமிழக கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் பணியில் டிவிகே ஈடுபட்டுள்ளதாகவும் அப்போது விமர்சித்து இருந்தார். பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளனரா அர்ஜுன் சம்பந்த், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
-
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள் -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக..சரிந்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை! விஜய் போட்ட பக்கா ப்ளான்..பாவம் இபிஎஸ் -
Vijay Vs Udhayanidhi: எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? விஜய்க்கு உதயநிதி நறுக் கேள்வி












Click it and Unblock the Notifications