ஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி!
2 மனைவிகளையும் விவசாயி வெற்றி பெற வைத்துள்ளார்
Recommended Video
திருவண்ணாமலை: தனசேகர் முகத்தில் அப்படி ஒரு குஷி.. தன்னுடைய 2 மனைவிகளுமே தேர்தலில் ஜெயித்து விட்டனர்.. மாலையும் கழுத்துமாக வலம் வரும் மனைவிகளின் வெற்றியை இந்த விவசாயி தனசேகர் கொண்டாடி வருகிறார்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமம் வழுவூர்- அகரம்.. இங்கு வசித்து வருபவர்தான் தனசேகர்.. இவர் ஒரு விவசாயி.. இவருக்கு செல்வி, காஞ்சனா என்ற இரண்டு மனைவிகள்.

தனசேகரன் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். அதேபோல, செல்வியும் ஏற்கனவே வழுவூர்- அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார்.. அதனால் திரும்பவும், இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வழுவூர்- அகரம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு செல்வி போட்டியிட்டார்.
அதேபோல, காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர்... இவருக்கு இந்த ஊரில் நிறைய செல்வாக்கு இருக்கிறது.. சொந்த கிராமம் என்பதால் இங்கேயே போட்டியிட்டார்.. அதனால் வழுவூர் அகரம் கிராமத்தில் போட்டியிடாமல், கோவில்குப்பம் சாத்தனூரிலேயே வேட்பாளராக நின்றார்.
ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால், தனசேகருக்கு தொகுதிகள் அத்துப்படி.. தொகுதி மக்களம் நெருக்கம்.. 2 கிராமங்களிலும் சுற்றி சுற்றி வந்து 2 மனைவிகளுக்கு வாக்கு சேகரித்தார்.. இவர்களின் குடும்பமும் இந்த பிரச்சாரத்தில் இணைந்தது.. வந்தவாசி ஒன்றியத்தில் போன 30-ம் தேதி தேர்தல் நடந்து, அதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில், தனசேகரனின் 2 மனைவிகளுமே அபார வெற்றி பெற்று தலைவிகளாகி உள்ளனர்.. இதில் வெற்றி பெற்றவர்களை விட, அவர்களை ஜெயிக்க வைத்த தனசேகரனுக்குதான் வாழ்த்து குவிகிறதாம்.. 2 பக்கம் 2 மனைவிகளுக்கு மாலை அணிவித்து.. அந்த பூரிப்பில் நனைந்து வருகிறார் தனசேகரன்!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications