ஒரே வீடு.. தனித் தனி ரூமில்.. கணவனும் மனைவியும்.. கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகலை.. கொடுமை!
புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
திருவண்ணாமலை: ஒரே வீடு.. தனித்தனி ரூமில்.. ஆளுக்கு ஒரு தூக்கு கயிறில் கணவன் மனைவி இருவருமே தொங்கிவிட்டனர்.. இந்த தம்பதிக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் கூட ஆகவில்லை என்பதே சோகம்!!
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகில் மோத்தக்கல் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் வேடியப்பன்... இவருடைய மகன் ஜெயக்குமார்.. 24 வயதாகிறது.. டிப்ளமோ படித்திருக்கிறார்.

இவருக்கு விஜயா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.. விஜயாவுக்கு 23 வயது.. டீச்சர் டிரெயினிங் படித்துள்ளார்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்.. இந்த நட்பு காதலானது.. அதனால் அடிக்கடி ஜெயக்குமார், விஜயாவை சந்திக்க கல்லூர் கிராமத்துக்கு சென்று வந்தார்.
ஜெயக்குமார் அடிக்கடி கிராமத்துக்கு வந்து போனதும் மகளை பார்த்து விட்டு போவதும் விஜயாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பும் எழுந்தது. அதேபோல, ஜெயக்குமாரின் வீட்டிலும் விஜயாவை ஏற்க விருப்பம் இல்லை.
இதனால் காதலர்கள் இருவரும் ஒன்றரை மாசத்துக்கு முன்பு தங்களது வீட்டை விட்டு வெளியேறினர்.. ஒரு கோயிலில் வைத்து விஜயாவுக்கு தாலி கட்டினார் ஜெயக்குமார்.. இதன்பிறகு கோட்டக்கல் என்ற கிராமத்திற்கு வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆனாலும் விஜயா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்... கடுமையாக திட்டி உள்ளனர்.. நாள் ஆக ஆக வசவுகள் அதிகமானதால், தம்பதி இருவருமே மனம் உடைந்தனர்.. நிம்மதியாக வாழ விடாததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, தனித்தனி ரூமில் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்யாணம் ஆகி ஒன்றரை மாசமே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.. புதுமண தம்பதியின் இந்த அதிர்ச்சி முடிவு அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் லாக்டவுன் வன்முறைகள் பெருகி வருவது போலவே துர்சம்பவங்களும் பெருகி வருவது தமிழக மக்களுக்கு கவலையை கூட்டி வருகிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications