பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கோலம்! கையில் கத்தையாக பணம்! அமைச்சர் எவ வேலு பிறந்தநாள் ருசிகரம்!
அமைச்சர் எ.வ.வேலு பிறந்தநாள் விழா ருசிகரம்.
திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலு இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், வாழ்த்துக் கூற வந்தவர்களுக்கு எல்லாம் வயிறார விருந்து போட்டு அனுப்பி வைத்தார்.
அதேபோல் கையில் இருபதாயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் சலவைத் தாள்களை கத்தையாக வைத்துக் கொண்டு பிறந்தநாள் பரிசாக வாழ்த்துக் கூற வந்தவர்களுக்கு கொடுத்தனுப்பினார்.
இதனிடையே ஆட்டுக்கிடாய், ஆளுயர பேனா, வெள்ளி வாள், என தொண்டர்கள் வழங்கிய பிறந்தநாள் பரிசுப் பொருட்களால் அமைச்சர் எவ வேலு திக்குமுக்காடி போய்விட்டார்.

அமைச்சர் எவ வேலு
தமிழக அமைச்சரவையில் மிகவும் பவர்ஃபுல் இலாக்காகளை கையில் வைத்திருப்பவர் அமைச்சர் எ.வ.வேலு. இன்று தனது 72வது பிறந்தநாள் கொண்டாடிய இவர், வழக்கமாக அணியும் கட்சி கரைவேட்டியை தவிர்த்து விட்டு, மாப்பிள்ளை கோலத்தில் பட்டு வேட்டி சட்டை அணிந்து தொண்டர்கள், நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். எவ வேலுவுக்கு வாழ்த்துச் சொல்வதற்காக சாரை சாரையாக திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் அருணை கல்லூரியில் குவிந்தனர்.

கையில் பணம்
ரூ.100 சலவைத் தாள்களுடன் கையில் கத்தையாக இருபதாயிரம் ரூபாயை வைத்திருந்த அமைச்சர் எ.வ.வேலு, வாழ்த்துச் சொன்ன வந்தவர்களுக்கு தனது பரிசாக ரூ.100 கொடுத்து அனுப்பினார். அதுமட்டுமின்றி தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் முதல் ஆளாக காலையிலேயே அமைச்சர் வேலுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.

பரிசுப் பொருட்கள்
இதனிடையே ஆட்டுக்கிடாய், ஆளுயர பேனா, வெள்ளி வாள், பிரம்மாண்ட சுவர் புகைப்படம் என ஒவ்வொரு நிர்வாகியும் தங்களது வசதிக்கேற்ப பரிசுப் பொருட்களை கொண்டு வந்து குவித்தனர். அதனைக் கண்டு திக்குமுக்காடி போன அமைச்சர் எவ வேலு அவர்களிடம் இதெல்லாம் எதற்கு என செல்லமாக கடிந்துகொண்டார். அதேபோல் சக அமைச்சர்கள் அனைவரும் தொலைபேசி மூலம் எவ வேலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்தனர்.

டயர்ட் ஆன வேலு
காலை முதல் மதியம் வரை மாற்றி மாற்றி தொண்டர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள், என பல தரப்பட்டோரும் வாழ்த்துச் சொல்ல வருகை தந்த வண்ணம் இருந்ததால் ஒரு கட்டத்தில் டயர்ட் ஆகிவிட்டார் அமைச்சர் எவ வேலு.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது












Click it and Unblock the Notifications