கார் விபத்தில் சிக்கினார் அமைச்சர் எவ வேலுவின் மகன்! மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?
திருவண்ணாமலை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலுவின் மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த கம்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எவ வேலு. இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களில் ஒருவர்.

எவ வேலுவின் மகன் பெயர் கம்பன். இவர் திமுக மருத்துவ அணியில் செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் கம்பனை போட்டியிட வைக்க எவ வேலு காய்நகர்த்தினார். ஆனால் அது கடைசியில் நடைபெறவில்லை.
இந்நிலையில் தான் திருவண்ணாமலை ஏந்தன் பைபாஸ் ரோட்டில் இன்று எவ வேலுவின் மகன் கம்பன் காரில் சென்று கொண்டிருந்தார். எவ வேலுவுக்கு சொந்தமான அருணை கல்லூரியில் இருந்து கம்பன் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைபாஸ் சாலை சந்திப்பில் அவரது காரும், வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற இன்னொரு காரும் திடீரென்று மோதியது.
இதில் 2 கார்களும் சேதமடைந்தன. மேலும் அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். குறிப்பாக கம்பன் பயணித்த காரில் அவரும், அவரது டிரைவரும் இருந்த நிலையில் இருவரும் காயமடைந்தனர். இதையடுத்த உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. அதோடு விபத்து நடந்த இடத்தில் எவ வேலு பயணித்த காரின் ஒரு டயர் வெடித்து இருந்தது. இந்த டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? இல்லாவிட்டால் கார் விபத்து நடந்த பிறகு டயர் வெடித்ததா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications