திருவண்ணாமலை மக்களுக்கு விடிவு.. புதிய பஸ் நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.. எவ வேலு பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.47 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் மூடப்பட்ட டான்காப் ஆலை இயங்கிய இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் ஓரளவு திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீக தலமான திருவண்ணாமலை இந்தியாவில் புகழ் பெற்ற நகரமாக இருக்கிறது.திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை மிகப்பெரிய அளவில் உள்ளது. நாள்தோறும் ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்காணோர் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். கர்நாடகா, கேரளா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பலர் வருகிறார்கள். பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் போய் வருவது சவாலானதாக இருக்கும். அதேபோல் கிரிவலம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள்.

MK Stalin will inaugurate the new bus stand being built at a cost of Rs 47 crore in the Tiruvannamalai

அதேநேரம் தற்போது சாதாரண நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உள்ளது. பக்தர்கள் அதிக அளவில் வருவதால், ஏற்கனவே நெரிசலில் உள்ள நகரம் மேலும் நெரிசலில் தவித்து வருகிறது. இந்த நெரிசலை குறைக்கும் விதமாக திண்டிவனம் சாலையில், பாலத்திற்கு அடியில் உள்ள பழைய டான்காப் ஆலை இயங்கி வந்த இடத்தில் திருவண்ணாலையின் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சுமார் 47 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது.

முதல் கட்டப் பணிகள் முடிந்த போது, ஒரே நேரத்தில் சுமார் 54 பேருந்துகளை நிறுத்துவதற்கான நடைமேடைகள் அமைக்கப்பட்டது. விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு, மொத்தம் 100 பேருந்துகளை நிறுத்த முடியும். பேருந்து நிலையத்தில், பயணிகள் காத்திருப்பு அறைகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்தங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் , குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் போலீஸ் புறக்காவல் நிலையம், மின்சாரத் தேவைகளுக்காக சூரிய ஒளியில் இயங்கும் LED விளக்குகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நடைபெறும் பணிகள் குறித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், "திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.46 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை காந்தி நகரில் ரூ.29¼ கோடியில் புதிய பூமார்க்கெட் மற்றும் காய்கறி அங்காடி கட்டப்பட்டு உள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தற்போது நகரில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாநகராட்சியில், ரூ.37 கோடியில் புதிய டைடல் பார்க், ரூ.64 கோடியே 30 லட்சத்தில் கிரிவலப்பாதையில் புதிய தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ.3 கோடியில் 4 இடங்களில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.473 கோடி மதிப்பீட்டில் 57 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.92 கோடி மதிப்பீட்டில் 6 பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. 2025-26-ம் ஆண்டில் ரூ.65 கோடியில் 18 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ரூ.30 கோடியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, தீபத்திருவிழாவுக்கு முன்பாக முடிக்கப்படும்.

ரூ.11 கோடியில் கிரிவலப்பாதை சாலை மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் 14 இடங்களில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம். ரூ.21 கோடியில் அண்ணா நுழைவுவாயில் முதல் தீபம் நகர் வரை சாலை மேம்படுத்தப்படும்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+