ஜாதிவாரி கணக்கெடுப்பு.. நேற்று எங்க அப்பா ராமதாஸ்.. இன்று அவரு பிள்ளைங்க நாங்க போராடுகிறோம்: சீமான்
திருவண்ணாமலை: ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசே நடத்தலாம் என்பதற்கு பீகார் உதாரணமாக இருக்கும் போது ஏன் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பில் ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். தமிழ் தேசிய இனம் ஒரு தொன்மை இனம். இதற்கென ஒரு மெய்யியல் கோட்பாடும் வழிபாட்டு முறையும் இருக்கிறது. எங்களுக்கு கடவுள் இல்லை. எங்களுக்கு இறை, தெய்வம் உண்டு. எங்கள் முன்னோர்களை வழிபடுகிற குலதெய்வ வழிபாட்டு முறை எமக்கு உண்டு. அதான் முருகன், சிவன், வேந்தன் இந்திரன், கொற்றவை வழிபாடு. சிவகங்கை மாவட்டத்தில் வீரமாகாளியம்மன் எங்கள் குல தெய்வமாக இருக்கிறது. நான் வேலை கையில் எடுத்த போது சுப.வீரபாண்டியன் மூலமாக முரசொலியில் காரி உமிழ்ந்தீர்கள். அதையே பாஜக கையில் எடுத்த போது நீங்களும் கையில் எடுத்தீர்கள். நீங்கள் செய்தால் மட்டும் சரியா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்புகிறார். திமுக நேற்றுதான் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்ததா? நாங்கள் பேசலாம். அதிகாரத்துக்கு வரலை. எங்க தாத்தா ஆனைமுத்து பேசினாரு.. அதுக்கு அப்புறம் எங்க அப்பா ராமதாஸ் அய்யா ராமதாஸ் பேசினாரு.. அதற்கு அப்புறம் அவரு பிள்ளைங்க நாங்க பேசுறோம். நீங்க எங்க பேசுறீங்க? ஜாதிவாரி கணக்கெடுப்பை நீங்க எடுக்க முடியாதா? பீகாரில் நிதிஷ்குமார் இப்படித்தான் பிரதமருக்கு கடிதம் எழுதிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாரா? பாஜகதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதுன்னு தெரியுமே.. அவங்களோட உண்மையான எண்ணிக்கை தெரிஞ்சுடுமே.. அமாதிரி திமுகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.. ஏனெனில் தமிழர் அல்லாதோர் எத்தனை இடங்களை அபகரித்திருக்கிறார்க என்பது அம்பலமாகிவிடும் என்பதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது திமுக அரசு.
இந்தியாவில் கூட்டாட்சி என்பதே இல்லையே. இந்தியாவில் ஒவ்வொரு மாநில கட்சிகளும் ஒன்று கூடி சுழற்சி முறையில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்ளும் போதுதான் என் தேசம், என் மக்கள் என்ற உணர்வு வரும். இந்தி மொழி பேசுகிறவர்களுக்குதான் பிரதமர் பதவி என்கிற போது எப்படி தேசம், மக்கள் என்கிற உணர்வு வரும்? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications