கையில் மம்பட்டியுடன் அமைச்சர் எ.வ.வேலுவா இது? ஆள் அடையாளமே தெரியாத மாதிரி இதென்ன புது கெட் அப்!

தூய்மைப் பணியில் அமைச்சர் எவ வேலு.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: கையில் மம்பட்டி, கடப்பாரையுடன் களமிறங்கிய அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

தூய்மை அருணை அமைப்பு சார்பில் தன்னுடன் ஆயிரம் பேரை இந்த பணியில் ஈடுபடுத்திய அமைச்சர் எ.வ.வேலு, அவர்களுடன் சேர்ந்து தாமும் களப்பணியாற்றினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தூய்மை அருணை என்ற மக்கள் இயக்கத்தை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 தூய்மை அருணை

தூய்மை அருணை

திருவண்ணாமலைக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் தண்ணீர் பாட்டில், உணவு பொட்டலம், பிளாஸ்டிக் பைகள், என டன் கணக்கில் கழிவுப் பொருட்கள் குவிந்து வருகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இது போன்ற பணிகளில் அரசுடன் மக்களையும் கை கோர்க்க வைக்கும் விதமாக தூய்மை அருணை என்ற மக்கள் இயக்கத்தை அமைச்சர் எ.வ.வேலு நடத்தி வருகிறார்.

மஞ்சள் டீ ஷர்ட்

மஞ்சள் டீ ஷர்ட்

பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வியாபாரிகள், மகளிர், என பலதரப்பட்டோரை ஒருங்கிணைத்து தூய்மை அருணை இயக்கத்தை நடத்தி வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த அமைப்புக்கு என மஞ்சள் டீ ஷர்ட், கருப்பு பேண்ட், என தனி சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

கவனம் ஈர்த்த எவ வேலு

கவனம் ஈர்த்த எவ வேலு

இதனிடையே கடந்த ஒரு மாதமாக ஈரோட்டில் முகாமிட்டு இடைத்தேர்தல் பணியில் படு மும்முரமாக ஈடுபட்டு வந்த அமைச்சர் எவ வேலு, அதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக சென்னையில் முகாமிட்டு ஸ்டாலின் பிறந்தநாள், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் என பிசியாக இருந்து வந்தார். இந்நிலையில் விடுமுறை தினமான இன்று தனது டீமுடன் கையில் கடப்பாரை, அரிவாள், மம்பட்டி, என தூய்மைப் பணிக்கான உபகரணங்களுடன் களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் எவ வேலு.

நீர் மோர் பந்தல்

நீர் மோர் பந்தல்

இவருடன் இவரது மகனும் இந்த தூய்மைப் பணியில் பங்கெடுத்தார். இதனிடையே கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் தூய்மை அருணை அமைப்பு சார்பில் அமைச்சர் எவ வேலு நீர், மோர் பந்தல் அமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+