திருவண்ணாமலை அருகே கல்லரைப்பாடியில்.. பழமைவாய்ந்த பல்லவர் கால நடுகல் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கல்லரைப்பாடி கிராமத்தின் ஏரிக்கரையில் 6ம் நூற்றாண்டு
பல்லவர் காலத்திய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார அமைப்பின் தலைவரும் மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து மஷார் அருகே உள்ள கல்லரைப்பாடி கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் பொழுது ஏரிக்கரையில் உள்ள வேடியப்பன் கோவிலில் ஆய்வு செய்யப்பட்டது.

வடக்கு தெற்காக விரியும் ஏரிக்கரையின் தென் மூலையில் கிழக்கு நோக்கி மூன்றடி சுற்றுச் சுவருடன் வெட்ட வெளியில் ஒரு வேடியப்பன் சிலை வழிபாட்டில் இருந்து வருகிறது. அச்சிலை சமீபத்தில் வடிக்கப்பட்டு வழிபடுவதால் பழைய வேடியப்பன் சிலையைத் தேடிய பொழுது , சுற்றுச்சுவருக்கு வெளியே தெற்கு பக்கம் பலகை கல்லினால் ஆன பழைய வேடியப்பன் சிலை ஒன்று காணப்பட்டது.
ஆநிரைகளை மீட்கவோ , தனது ஊரைக் காக்கவோ போரிட்டு வீரமரணம் அடைந்த நபர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் சங்க காலம் முதல் வழக்கத்தில் உள்ளது. தமிழகம் எங்கும் ஏராளமான நடுகற்கள் கிடைக்கப் பெற்றாலும் , திருவண்ணாமலையை ஒட்டியுள்ள பகுதியில் கிடைக்கப்பெற்ற நடுகற்களின் தொகுப்புகளாகிய "செங்கம் நடுகற்கள்" இன்றளவும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் கி.பி 6ம் நூற்றாண்டு பல்லவர் காலம் தொட்டு கி.பி 18ம் நூற்றாண்டு நாயக்கர் காலம் வரை ஏராளமான நடுகற்கள் காணக்கிடைக்கிறது. திருவண்ணாமலை , வேலூர் , தருமபுரி ஆகிய பகுதிகளில் இந்நடுகற்கள் அனைத்தும் "வேடியப்பன்" என்ற பொதுப் பெயரில் இன்றளவும் வழிப்பாட்டில் சிறப்புடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வாய்ந்த பல்லவர் காலத்திய நடுகல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில், சுமார் இரண்டடி அகலமும் மூன்றடி உயரம் கொண்ட பலகை கல்லில் வீரன் ஒருவன் வில் அம்புடன் போர் புரியும் காட்சி அழகுறப் புடைப்பாக வடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
வீரனின் முகம் இடது பக்கம் திரும்பிய நிலையில் , வலது கையில் குறுவாளும், இடது கையில் நீண்ட வில்லுடன் வீரன் உள்ளான். அவன் கையில் காப்பு மற்றும் இடையில் அரையாடை அணிந்து பாதங்கள் இடது பக்கம் திரும்பி, போருக்குச் செல்லும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. மேலும் வீரனின் வலது கையருகே சிறு தோரணம் உள்ள து.)
வீரனின் வலது கால் அருகே சிவலிங்கமும் , இடது கால் அருகே கெண்டியும் இடம் பெற்றுள்ளது. வீரனின் ஆடை இறுக்கமான முடிச்சுக்களுடன் காற்றில் பறக்கும்படி நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது.

தற்பொழுது இச்சிற்பத்தில் எழுத்துக்கள் ஏதும் காணப்பெறாவிட்டாலும் , வலது புறம் உடைந்துள்ள இடத்தில் ஏதேனும் எழுத்துக்கள் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. எழுத்துக்கள் ஏதும் கிடைக்காவிட்டாலும் இந்த சிற்ப அமைதியை கொண்டு இந்த நடுகல் 6ம் நூற்றாண்டின் கடைபகுதியை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதாவது சிம்மவிஷ்ணு அல்லது முதலாம் மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கக் கூடும்.சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நடுகல்லைத் தவறான மூடநம்பிக்கையால் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் மழை வரவில்லை என்று கல்லைப் போட்டு யாரோ ஒருவர் உடைத்த செவி வழி செய்தியொன்று இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆறு மாதங்கள் முன்னர் ஊர் மக்கள் உடைந்த நடுகல்லை அகற்றிவிட்டு, புதியதாய் ஒரு வேடியப்பன் சிற்பம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். நல்லவேளையாக உடைந்த நடுகல்லை வீசி எறியாமல் வெளியே வைத்துள்ளதால் காலத்தின் சாட்சியாய் இன்று நமக்கு உள்ளது. இது போன்ற சில தவறான மூடநம்பிக்கைகளால் நாம் பல காலமாகத் தொடர்ந்து நம் தொன்மங்களை இழந்து வருவது வேதனையான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications