கார்த்திகை திருவிழா.. திரளும் லட்சக்கணக்கான பக்தர்கள்! திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில்கொண்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை காவல்துறை செய்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், "
வேலூர் சாலை: திருவண்ணாமலை - வேலூர் சாலையானது ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி ஆகிய வழித்தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை தீபம் நகர் ரிங் ரோட்டிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி, அவலூர்பேட்டை ரிங்ரோடு ஜங்சன் ரயில்வே கேட் வழியாக அண்ணா ஆர்ச் தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். அண்ணா ஆர்ச் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தென்றல்நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீபம்நகர் வழியாக செல்லும்.

அவலூர்பேட்டை சாலை: காஞ்சிபுரம், வந்தவாசி, அவலூர்பேட்டை, சேத்பட்டு ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு முன்பு SRGDS பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்.
திண்டிவனம் சாலை: சென்னை, புதுச்சேரி, செஞ்சி ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை மார்க்கெட்டிங் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள பேருந்துகள் ரிங்ரோட்டில் உள்ள ஆறுமுகநார் நகர் காலி இடத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்.
வேட்டவலம் சாலை: வேட்டவலம், விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு ஏந்தல் கிராமத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
திருக்கோவிலூர் சாலை: திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வந்து சேரும். பேருந்துகள் அதிகப்படியாகும் பொழுது நெய்வேலி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் வழித்தடப் பேருந்துகள் அருணை மருத்துவக்கல்லூரி எதிரில் உள்ள மைதானத்திற்கு அனுப்பப்படும்.
மணலூர்பேட்டை சாலை மற்றும் தண்டராம்பட்டு சாலை: கள்ளக்குறிச்சி, அருர், சேலம், தண்டராம்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து தண்டராம்பட்டு சாலை வழியாக வரும் பேருந்துகள் தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று SK steel எதிரில் உள்ள (காலி இடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும். பின்னர், மணலூர்பேட்டை சாலையில் உள்ள ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி தண்டராம்பட்டு சாலையை அடைந்து தங்களது ஊர்களுக்கு செல்லும்.
தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய ஊர்கள் வழியாக வரும் பேருந்துகள் மணலூர்பேட்டை சாலையில் திருவண்ணாமலை அருகில் உள்ள ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி மம்மிடாடி திருமண மண்டபத்தின் வலது புறம் திரும்பி தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று SK Steel எதிரில் உள்ள (காலி இடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்துசேரும். பின்னர், காட்டாம் பூண்டி மற்றும் மணலூர் பேட்டை வழியாக தங்களின் ஊர்களுக்கு செல்லும்.
செங்கம் சாலை: பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குப்பம், KGF ஆகிய வழித்தட பேருந்துகள் கிரிவலப்பதை அருகில் உள்ள அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் அதிகமாகும் போது அருகில் உள்ள கங்கையம்மன் கோவில் (காலியிடம்) மற்றும் சுபிக்ஷா கார்டன் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். தேவைப்படும் பொழுது அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அனுப்பப்படும்.
காஞ்சி சாலை: புதுப்பாளையம், காஞ்சி, கடலாடி மேல்சோழங்குப்பம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆடையூர் Don Bosco சிகரம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்.
திருவண்ணாமலை நகரத்தை சுற்றி உள்ள கார் நிறுத்தும் இடங்களை எளிதில் கண்டறிய https://tvmpolicedeepam2023.com/ என்ற வளைதளத்தையும், மேலும் காவல் அவசர உதவிக்கு 044-28447703, 044 - 28447701 மற்றும் 8939686742 ஆகிய எண்களையும், குழந்தைகள் காணாமல் போவது சம்மந்தமான உதவிக்கு 9342116232, 8438208003 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications