அரிசியை இழுக்கிறது, பால் தயிராக மாறுகிறது.. சதுரங்க வேட்டை சங்கு மோசடி.. பொறி வைத்து பிடித்த போலீஸ்
திருவண்ணாமலை: அரிசியை இழுப்பதாகவும், பாலை தயிராக்குவதாகவும் கூறி, திருவண்ணாமலையில், போலி வலம்புாி சங்கை விற்க முயன்ற 7 பேர் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போளுா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் பரணி. இவர் நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக உள்ளார்.
இவரிடம் திருவண்ணாமலை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த, கிரிவல பாதையில், இடைக்காடர் சித்தர் ஆசிரமத்தை நடத்தி வரும், கோவிந்தராஜ் என்பவர் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தங்களிடம் அபூர்வ வலம்புரி சங்கு இருப்பதாகவும், அந்த சங்கை வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரனாகி விடுவார்கள் என்று தெரிவித்து, அதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும், அதனை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும், விற்பனை கமிஷனாக பல லட்சம் தருகிறோம் ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

அரிசி நகர்ந்தது, பால் தயிரானது
அவர்கள் குறிப்பிட்ட வலம்புரி சங்கின், அருகே அரிசியை வைத்தால் அது சங்கை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. வலம்புரி சங்கில் பாலை ஊற்றினால் தயிராக மாறுவதாகவும் காண்பித்துள்ளனர். இதை பார்த்தவர்கள் அப்படியே அதிசயித்து விட்டனர். வலம்புரி சங்கை வீட்டில் வைத்திருந்தால் அரிசி ஓடி வருவதை போல, பணம் வரும் என்றும் அந்த நபர்கள் மூளைச் சலவை செய்துள்ளனர்.

பரணிக்கு வந்த சந்தேகம்
இதையடுத்து பரணியை, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரிமம் எதிரில் உள்ள பாபா கோவில் அருகில் வருமாறு அழைத்து உள்ளது அந்த கும்பல். பின்னர் அவர் அங்கு சென்று பார்த்த போது கோவிந்தராஜுடன் கோவில் அருகில் ஒரு கும்பல் இருந்து உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பரணி, திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 7 பேர் சிக்கினர்.

போலீசார் அதிரடி
இதில் சங்கு கொண்ட வந்த ஸ்ரீராம் என்ற நபர் தப்பியோடி விட்டார். பின்னர் அவர்களை திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 53), ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த சதீஷ் (21), வேட்டவலத்தை சேர்ந்த உமாசங்கர் (38), செஞ்சி தாலுகா ஜெயங்குண்டம் பகுதியை சேர்ந்த அரசு (50), புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தை சேர்ந்த ராம்குமார் (32), திருவண்ணாமலை பே கோபுரத் தெருவை சேர்ந்த அஸ்வத்தாமன் (28), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (41) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கூட்டு சதி உள்ளதா என விசாரணை
மேலும், தப்பியோடிய நபர் கடலூரை சேர்ந்த ஸ்ரீராம் என்பது தெரியவந்தது. அவர் மூலம் அவர்கள் ஒன்றிணைந்து மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. மேலும் இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி நேரில் வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் வலம்புரி சங்கு எனக்கூறி போலி சங்கை ஏமாந்தவர்களிடம் மூளை சலவை செய்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்று பணம் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போலி வலம்புரி சங்கை பறிமுதல் செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தனர் என்றும் இவர்கள் வேறு ஏதேனும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனரா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எப்படி நடந்தது மோசடி
போலி, சங்கின் உள்ளே பேட்டரி வைத்து அரிசி ஈர்க்கப்பட்டதும், கெமிக்கல் வைத்து பால் தயிராக மாறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சதுரங்க வேட்டை திரைப்படத்தில் காண்பித்ததை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன. இதையெல்லாம் பார்த்த போலீசார்.. உழைத்து செல்வத்தை பெருக்குங்கள், இப்படி குறுக்கு வழியில் ஆசைப்பட்டு சிக்காதீர்கள் என பேராசை நபர்களுக்கு எச்சரிக்கை பிறப்பித்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications