தவெக மாவட்ட செயலாளர்களின் பாலியல் சீண்டல்.. கொந்தளித்து போராட்டங்களில் இறங்கிய பெண் நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தவெக மாவட்டச் செயலாளர் சத்யா மீது பெண் நிர்வாகிகள் பாலியல் புகார் தெரிவித்து, அலுவலகத்தைப் பூட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். தவெக மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தவெக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு அநாகரீக குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக எம்.எல்.ஏவைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Sexual Harassment Allegations Rock TVK Women Office-Bearers Lock Party Office

தவெகவில் பெண் நிர்வாகிகள் புகார்

இதற்கிடையே, ஆளுங்கட்சியான தவெகவுக்குள்ளேயே, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளே பாலியல் புகார் தெரிவித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சத்யா என்ற சத்தியராஜுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இன்று அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். சத்யாவை மா.செ பதவியில் இருந்து நீக்கவேண்டும் என தலைமையைக் கோரியுள்ளனர்.

ஆரணி சத்யா

ஆரணியில் அமைந்துள்ள தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யாவின் அலுவலகத்தை இன்று தவெக பெண் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது, அலுவலக பேனரில் இடம்பெற்றிருந்த சத்யாவின் புகைப்படத்தை கருப்பு மை பூசி அழித்தும், அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆரணியை விட்டு வெளியேறு' என்று ஆவேசமாக கோஷமிட்டதாலும் பரபரப்பான சூழல் நிலவியது.

தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா பெண் நிர்வாகிகளை ஒருமையிலும், கெட்ட வார்த்தைகளாலும் தகாத முறையில் திட்டி பேசி வருகிறார். நிர்வாகிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து சொகுசு கார், 4 மனைகளை வாங்கிவிட்டார், கட்சியின் பெயரைக் கெடுக்கிறார் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குமுறி உள்ளனர்.

பெண் நிர்வாகிகள் குமுறல்

திருவண்ணாமலை வடக்கு நகரப் பொறுப்பாளரான ராதா என்ற பெண் நிர்வாகி பேசும்போது, "மாவட்டச் செயலாளர் சத்யா என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக ஆரம்பத்தில் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை.

ஒருகட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த்தையும் சந்தித்து புகார் கொடுத்துவிட்டு வந்தேன். அதன்பின்னர், என்னை கட்சிப் பதவியில் இருந்து விலகிச் செல்லுமாறு மிரட்டினார் மாவட்டச் செயலாளர் சத்யா. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றேன்.

பாலியல் புகார்

இவரால் என் வீட்டிலும் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை வந்தது. இப்போதுதான் மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யாவுக்கு எதிராக வெளியே வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு ஆள் கட்சியில் இருக்கவே கூடாது. ஏற்கெனவே, நான் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளேன்." எனக் கூறியுள்ளார்.

இதேபோல, கோவை மாவட்டம், காரமடை தவெக ஒன்றிய செயலாளர், ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அழைத்து தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். தவெக நிர்வாகிகள் மீதான இத்தகைய புகார்கள், கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+