ஷாக்: ரீல்ஸ் ஆசையால் கணவரை கொன்ற மனைவி! திருவண்ணாமலையில் வெளியான பல கள்ளத்தொடர்புகள் ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே லாரி டிரைவர் விஜய்யை கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஷர்மிளா கைதாகி உள்ளார்.. போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்துள்ள இடையன்குளத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜய் - ஷர்மிளா.. இந்த தம்பதிக்கு 4 மற்றும் 5 வயதில் மகன், மகள் உள்ளனர்.. இவர்களை கவனித்து கொண்டு ஷர்மிளா வீட்டில் இருந்துள்ளார்.

Tiruvannamalai Wife Jolly Tour

லாரி டிரைவர்

27 வயதான விஜய், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இதனால் வெளியூருக்கு அடிக்கடி வேலை விஷயமாக சென்றுவிடுவாராம், அப்படி சென்றால் வீடு திரும்ப 10, 15 நாட்கள் ஆகுமாம்.

சமீப காலமாக ஷர்மிளாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.. அடிக்கடி போனில் யாருடனோ ஷர்மிளா பேசுவதையும் விஜய் கவனித்துள்ளார். மேலும், ஷர்மிளா வீட்டுக்கு யாரோ ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாகவும் அக்கம் பக்கத்தினர் விஜய்யிடம் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து ஷர்மிளாவிடம் விஜய் கேட்டுள்ளார்.. அப்போது முதல் தம்பதிக்குள் தகராறு வெடித்து வந்துள்ளது.

ஷர்மிளா அம்மா வீடு

இதனால் கோபித்து கொண்டு அதே பகுதியிலுள்ள தன்னுடைய அம்மா ராணிபாத்திமா வீட்டிற்கு சென்றுவிட்டார் ஷர்மிளா.. 2 நாட்களுக்கு முன்பும் தம்பதிக்கு தகராறு வந்துள்ளது.. இதற்கு பிறகு, விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, ஷர்மிளாவும், ராணிபாத்திமாவும், உறவினர்களுக்கு தகவல் தந்தனர்..

ஆனால், அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும், விஜய் தற்கொலை செய்திருக்க மாட்டார், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதி போலீசில் சொன்னார்கள்.. இதையடுத்து, சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தியபோது, ஷர்மிளா பல்வேறு தகவல்களை போலீசாரிடம் சொல்லி உள்ளார்.

கள்ளக்காதலன் இன்ஸ்டா

தன்னுடைய கள்ளக்காதலனுடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஜாலியாக இருந்ததை கண்டித்ததால், கணவரை கொன்றதாக ஷர்மிளா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

விஜய்யின் நண்பர் சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.. அவரும் லாரி டிரைவர்தான்.. இதனால் விஜய்யும், அந்த நபரும் நண்பர்களானார்கள்..

விஜய்யின் வீட்டுக்கு, அந்த நண்பர் அடிக்கடி வந்து செல்வாராம். இதனால் ஷர்மிளாவுக்கும், அந்த நண்பருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. விஜய் வீட்டில் இல்லாதபோது, நண்பர் அடிக்க வந்துசென்றுள்ளார்..

ஜாலி டூர்

லாரியில் விஜய் வெளியூர் சென்றால், அவர் எப்போது வருவார்? எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் நண்பருக்கு நன்றாகவே தெரியும் என்பதால், கள்ளக்காதல் ஜோடி இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். மேலும் ரீல்ஸ்கள் மற்றும் போட்டோவை எடுத்துள்ளனர். இதனை எல்லாம் ஷர்மிளா இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்துள்ளார்.

வெளியூரில் உள்ள விஜய், இந்த ரீல்ஸ் வீடியோ, போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷர்மிளாவை கண்டித்துள்ளார்.

ஜன்னலில் தூக்கு

இதுதொடர்பாகவே 2 நாளைக்கு முன்பும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டுக்கட்டையாலும், கம்பியாலும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி, ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்துள்ளனர். பிறகு தூக்குபோட்டு கொண்டதாக நாடகமாடியுள்ளனர்.

ஆனால் அந்த லாரி டிரைவர் நண்பர் மட்டுமல்லாமல் ஷர்மிளாவுக்கு மேலும் பலரிடம் தகாத உறவு உள்ளதும் தெரியவந்துள்ளது. இப்போதைக்கு தாய், மகளை கைது செய்த போலீசார், போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+