Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார்ராது முரட்டு ஆளா இருக்கான்..அதுவும் போலீஸ் ஜீப்பை திருடிக்கிட்டு.. ஷார்ட் ரூட்டில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: ஆந்திராவில் போலீஸ் ஜீப்பை கடத்திய வாலிபரை சினிமா பாணியில் சேசிங் செய்து விரட்டி பிடித்ததுடன், அவரை ஆந்திர போலீசுடம் ஒப்படைத்து அசத்தி உள்ளனர் தமிழக போலீஸார். சினிமாவை மிஞ்சிய சேசிங் காட்சி வீடியோ ஒன்றும் இதுபற்றி வெளியாகி உள்ளது.

சினிமாவில் மட்டுமே சில காட்சிகளை பார்த்திருப்போம். போலீஸ் ஜீப்பை சிலர் திருடி செல்வார்கள், போலீஸ் பைக்கை சிலர் திருடி செல்வார்கள். அதை போலீசார் சேசிங் செய்து பிடிப்பார்கள். இப்படிப்பட்ட காட்சிகள் நிஜத்திலும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

Tamil Nadu police chased away the youth who hijacked the police jeep in Andhra in cinematic style

ஆனால் போலீசிடம் ஹீரோயிசம் செய்தவர்கள் கடைசியில் சிறைகளில் கம்பி தான் எண்ணுவார்கள். வழக்குகளுக்கு ஆஜராகியே பாதி வாழ்க்கையே தொலைத்து இருப்பார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட போலீஸ் ஜிப்பை, சினிமா பாணியில் துரத்தி சென்ற தமிழக போலீசார் இளைஞரை கைது செய்திருக்கிறார்கள்.

ஆந்திரா மாநிலம் சித்தூரில் போலீஸ் ஜீப்பை இளைஞர் ஒருவர் திருடி வேலூர் வழியாக சென்றுள்ளார்கள். இது குறித்து ஆந்திர போலீசார் தமிழ்நாட்டின் வேலூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். தமிழக போலீசார் வாகனம் திருடி செல்லப்பட்ட தகவலை கேட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வந்தவாசியில் பஜார் வழியாக ஜீப் சென்றதை பார்த்த துணை கண்காணிப்பாளர் கார்த்திக், துரத்திச் சென்றார். ஜீப்பை மடக்கி, திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில், ஜீப்பை திருடியது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சூர்யா என்று தெரிய வந்த‌து. இதையடுத்து, சூர்யாவையும், ஜீப்பையும் பிடித்துள்ள தகவலை ஆந்தி போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து ஆந்திர போலீசார் நேரில் வந்து ஜீப்பை, ஜீப் திருடன் சூர்யாவையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+