மொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்!
சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடியவர் போலீசில் சிக்கி கொண்டுள்ளார்
திருவண்ணாமலை: "டேய்.. வாசல் தாண்டின உடனே மொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா" என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவாரே.. அதே மாதிரி மிளகாய் பொடி தூவும் போது கொள்ளையன் சிக்கி கொண்டான்.. அது மட்டுமில்லை.. காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயலும்போது, கீழே விழுந்து காலையும் உடைத்து கொண்டு ஆஸ்பத்திரியில் இப்போது கட்டு போட்டு படுத்துள்ளார்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வசித்து வருபவர் சிவசாம்பு. இவர் கடலாடி ஸ்டேஷனல் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ரிடையர் ஆனவர். வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்த இவர், நேற்று வீட்டுக்கு திரும்பினார்.

ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, ஒரு திருடன் கையில் டிவி பெட்டியுடன் தப்பி செல்வதற்காக, மேல்மாடியில் இருந்து, அங்கிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி வெளியேறி குதித்தார்.
இதில், திருடனுக்கு காலில் பலமான அடிபட்டு, அதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. அதனால் அங்கேயே சுருண்டு விழுந்துவிடவும், சிவசாம்பு உட்பட பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து.. போளூர் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தனர். விசாரணையில் இந்த திருடன் பெயர் சதீஷ் என்பது தெரிய வந்தது.
பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதுதான் சதீஷுக்கு வேலை. அதன்படி சிவசாம்பு வீட்டுக்கு திருட வந்துள்ளார். வீட்டுக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டார் சதீஷ்.
இவ்வளவு பொருட்களை எடுத்தாலும், சிவசாம்பு வீட்டில் இருந்த டிவி பெட்டியை சதீஷுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதனால் அதையும் சத்தமில்லாமல் கழட்டி கையில் வைத்து கொண்டார். நேராக கிச்சனுக்கு போய் டப்பாவில் இருந்த மிளகாய் பொடியை வீடு முழுக்க தூவினார்.
ஆனால் அதற்குள் சிவசாம்பு வந்துவிடவும், அப்படியே மாடியிலிருந்து டிவி பெட்டியுடன் ஜம்ப் ஆகி குதித்து தப்பிவிட முயன்றபோதுதான் கீழே விழுந்து காலை உடைத்து கொண்டார். ஆட்டைய போட வந்த வீடு, போலீஸ்காரர் வீடு என்பது தெரியாமலேயே இப்போது சிக்கி கொண்டு விழிக்கிறார் சதீஷ்!
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications